• May 27 2026

புத்தளத்தில் இம்முறையும் பெருநாள் சந்தை; கட்டண குறைப்பு செய்து வியாபாரிகளுக்கு புத்தளம் மேயர் விஷேட சலுகை!

shanu / May 26th 2026, 12:11 pm
image

புனித ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு, இம்முறையும் புத்தளத்தில் பெருநாள் சந்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாநகர மேயர் பொறியியலாளர் ரின்ஷாட் அஹ்மட் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


போல்ஸ் வீதியில் உள்ள வர்த்தகர்கள் மற்றும் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, புனித ஹஜ்ஜூப் பெருநாள் சந்தை இம்முறை அநுராதபுரம் வீதிக்கு (பொலிஸ் நிலைய வீதி) மாற்றப்பட்டுள்ளது.


அத்துடன், உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை கருத்திற் கொண்டு, இம்முறை ஒரு கடைக்கு அறவிடப்படப்படும் தொகையை குறைத்து அறவிட தீர்மானித்துள்ளோம்.


மேலும், புத்தளம் நகரில் ஆங்காங்கே வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் சிறிய வியாபாரிகளிடம் அறவிடப்படும் கட்டணத் தொகையில் அதிகரிப்பு இல்லை என்பதனையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம் என்றார்.

புத்தளத்தில் இம்முறையும் பெருநாள் சந்தை; கட்டண குறைப்பு செய்து வியாபாரிகளுக்கு புத்தளம் மேயர் விஷேட சலுகை புனித ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு, இம்முறையும் புத்தளத்தில் பெருநாள் சந்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாநகர மேயர் பொறியியலாளர் ரின்ஷாட் அஹ்மட் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,போல்ஸ் வீதியில் உள்ள வர்த்தகர்கள் மற்றும் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, புனித ஹஜ்ஜூப் பெருநாள் சந்தை இம்முறை அநுராதபுரம் வீதிக்கு (பொலிஸ் நிலைய வீதி) மாற்றப்பட்டுள்ளது.அத்துடன், உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை கருத்திற் கொண்டு, இம்முறை ஒரு கடைக்கு அறவிடப்படப்படும் தொகையை குறைத்து அறவிட தீர்மானித்துள்ளோம்.மேலும், புத்தளம் நகரில் ஆங்காங்கே வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் சிறிய வியாபாரிகளிடம் அறவிடப்படும் கட்டணத் தொகையில் அதிகரிப்பு இல்லை என்பதனையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement