மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியான சாமிமலை பகுதியில் உள்ள ஹட்டன் வலய கல்வி பணிமனைக்கு உரித்தான கோட்டம் மூன்றில் அமைந்துள்ள கவரவலை தமிழ் வித்தியாலய ஆரம்ப பிரிவு பகுதியில் இவ்வாறான கோப்பி அரைக்கும் தொழிற்சாலை அமைக்க ஹொரன பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உரித்தான சாமிமலை பகுதியில் உள்ள கவரவலை தோட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து வருவதாக அப் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் அடங்கலாக அங்கு தரம் ஒன்று முதல் தரம் 11 வரை கல்வி பயிலும் சுமார் 300 க்கு மேற்பட்ட மாணவர்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து உள்ளனர்.
கடந்த 125 ஆண்டுகளாக கவரவலை தமிழ் வித்தியாலயம் மூடப்பட்ட நிலையில் இருந்த இரண்டு அடுக்கு கொண்ட கொட்டகையில் கல்வி நடவடிக்கைகள் இடம்பெற்று வந்தது சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இரண்டு அடுக்கு கொண்ட கொட்டகை உடைந்து விழும் நிலையில் இருந்ததால் புதிய கட்டிடம் அமைக்க பட்ட நிலையில் புதிய கட்டிடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டது.
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு தரம் 6 முதல் உயர் தரம் வரை சாமி மலை நகருக்கு அருகில் புதிய கட்டிடங்கள் உருவாக்க பட்டு அங்கு கவரவலை தமிழ் மகா வித்தியாலயம் உருவாக்க பட்டமை குறிப்பிடத்தக்கது.
அக் காலகட்டத்தில் குறித்த 125 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட தோட்ட முகாமையாளர், தோட்ட உத்தியோகத்தர்கள் தோட்ட காரியாலயம், பாடசாலை போன்ற வற்றுடன் கீழ் தலத்திளும் மேல் மாடியில் சினிமா கொட்டகையும் அப்போதைய வெள்ளையர்களின் நிர்வாகம் அந்த கொட்டகையில் நடந்தமைக்கான வரலாறுகள் உள்ளன.
அதன் பின்னர் காரியாலயம் கவரவலை தோட்ட தேயிலை தொழிற்சாலை பகுதியில் அமைக்கப்பட்ட நிலையில் தோட்ட முகாமையாளர் இல்ல பகுதிக்கு கொண்டு செல்ல பட்டது. .
காலப் போக்கில் தரம் ஒன்று முதல் உயர் தரம் வரை கல்வி நடவடிக்கைகள் இந்த கொட்டகையில் சாமிமலை பகுதியில் பெயர்ந்தோர், ஓல்ட்டன், கவரவலை,மாநெலி, ஸ்டோக்ஹோம், ஸ்டரஸ்பி மற்றும் சாமி மலை நகர் பகுதியில் உள்ள அனைத்து பிள்ளைகளுக்கும் ஒரே ஒரு பாடசாலையாக இயங்கி வந்தது.
நகருக்கு அருகில் புதிய கட்டிடங்கள் உருவாக்க பட்டு உயர் வகுப்புகள் அங்கு மாற்றப்பட்ட பின்னர் தரம் ஒன்று ஜந்து வரையிலான கல்வி நடவடிக்கைகள் இடம்பெற்று வந்தது.
காலப் போக்கில் மாணவர்கள் என்னிக்கை அதிகரிக்க தரம் 11 வரை கல்வி நடவடிக்கைகள் உயர்த்த பட்டது.இப் பாடசாலையில் அப் பகுதியில் உள்ள பெருந்தோட்ட மக்களின் பிள்ளைகள் குறிப்பாக கவரவலை தோட்ட நான்கு பிரிவுகளில் உள்ள தொழிலாளர்களின் பிள்ளைகளும் அப் பகுதியில் உள்ள ஹொரன பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உரித்தான ஓல்ட்டன் ஸ்டோக்ஹோம் தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் பிள்ளைகளும் கல்வி கற்று வருகின்றனர்.
குறிப்பிட்ட தேயிலை தொழிற்சாலைக்கும் தற்போது அமைந்துள்ள பாடசாலைக்கும் 5 மீட்டர் தூரம் கூட இல்லை அப் பகுதியில் கோப்பி அரைக்கும் தொழிற்சாலையை கவரவலை தோட்ட நிர்வாகம் அமைக்கும் பட்சத்தில் அந்த தொழிற்சாலையின் இயந்திரங்கள் இயங்கும் சத்தம் மற்றும் ஏனைய வாகனங்கள் வந்து செல்லும் சத்தம் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் சத்தம் பாடசாலைக்கு உகந்ததாக இல்லை.ஆகையால் கவரவலை தோட்ட தேயிலை தொழிற்சாலை அமைந்துள்ளது பகுதியில் கோப்பி அரைக்கும் தொழிற்சாலையை நிறுவ வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
தோட்ட நிர்வாகம் அதனை மறுக்கும் பட்சத்தில் நாளை 7 ம் திகதி முதல் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களை அப் பாடசாலையில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க பட உள்ளதாக பெற்றோர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
எதிர் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் பங்கு கொள்ள உள்ளனர் இதை தடுத்து நிறுத்த தோட்ட நிர்வாகம் மற்றும் ஹொரன பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உரித்தான உயர் அதிகாரிகள் பெருந்தோட்ட அமைச்சர் கல்வி அமைச்சர் மற்றும் நாட்டின் தலைவரான அதி மேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் முன் வர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் பாதிக்கப்பட்ட சாமிமலை பகுதியில் உள்ள கவரவலை தோட்ட மக்கள்.
பாடசாலைக்கு அருகில் கோப்பி அரைக்கும் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு. மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியான சாமிமலை பகுதியில் உள்ள ஹட்டன் வலய கல்வி பணிமனைக்கு உரித்தான கோட்டம் மூன்றில் அமைந்துள்ள கவரவலை தமிழ் வித்தியாலய ஆரம்ப பிரிவு பகுதியில் இவ்வாறான கோப்பி அரைக்கும் தொழிற்சாலை அமைக்க ஹொரன பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உரித்தான சாமிமலை பகுதியில் உள்ள கவரவலை தோட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து வருவதாக அப் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் அடங்கலாக அங்கு தரம் ஒன்று முதல் தரம் 11 வரை கல்வி பயிலும் சுமார் 300 க்கு மேற்பட்ட மாணவர்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து உள்ளனர்.கடந்த 125 ஆண்டுகளாக கவரவலை தமிழ் வித்தியாலயம் மூடப்பட்ட நிலையில் இருந்த இரண்டு அடுக்கு கொண்ட கொட்டகையில் கல்வி நடவடிக்கைகள் இடம்பெற்று வந்தது சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இரண்டு அடுக்கு கொண்ட கொட்டகை உடைந்து விழும் நிலையில் இருந்ததால் புதிய கட்டிடம் அமைக்க பட்ட நிலையில் புதிய கட்டிடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டது.சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு தரம் 6 முதல் உயர் தரம் வரை சாமி மலை நகருக்கு அருகில் புதிய கட்டிடங்கள் உருவாக்க பட்டு அங்கு கவரவலை தமிழ் மகா வித்தியாலயம் உருவாக்க பட்டமை குறிப்பிடத்தக்கது.அக் காலகட்டத்தில் குறித்த 125 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட தோட்ட முகாமையாளர், தோட்ட உத்தியோகத்தர்கள் தோட்ட காரியாலயம், பாடசாலை போன்ற வற்றுடன் கீழ் தலத்திளும் மேல் மாடியில் சினிமா கொட்டகையும் அப்போதைய வெள்ளையர்களின் நிர்வாகம் அந்த கொட்டகையில் நடந்தமைக்கான வரலாறுகள் உள்ளன.அதன் பின்னர் காரியாலயம் கவரவலை தோட்ட தேயிலை தொழிற்சாலை பகுதியில் அமைக்கப்பட்ட நிலையில் தோட்ட முகாமையாளர் இல்ல பகுதிக்கு கொண்டு செல்ல பட்டது. .காலப் போக்கில் தரம் ஒன்று முதல் உயர் தரம் வரை கல்வி நடவடிக்கைகள் இந்த கொட்டகையில் சாமிமலை பகுதியில் பெயர்ந்தோர், ஓல்ட்டன், கவரவலை,மாநெலி, ஸ்டோக்ஹோம், ஸ்டரஸ்பி மற்றும் சாமி மலை நகர் பகுதியில் உள்ள அனைத்து பிள்ளைகளுக்கும் ஒரே ஒரு பாடசாலையாக இயங்கி வந்தது.நகருக்கு அருகில் புதிய கட்டிடங்கள் உருவாக்க பட்டு உயர் வகுப்புகள் அங்கு மாற்றப்பட்ட பின்னர் தரம் ஒன்று ஜந்து வரையிலான கல்வி நடவடிக்கைகள் இடம்பெற்று வந்தது.காலப் போக்கில் மாணவர்கள் என்னிக்கை அதிகரிக்க தரம் 11 வரை கல்வி நடவடிக்கைகள் உயர்த்த பட்டது.இப் பாடசாலையில் அப் பகுதியில் உள்ள பெருந்தோட்ட மக்களின் பிள்ளைகள் குறிப்பாக கவரவலை தோட்ட நான்கு பிரிவுகளில் உள்ள தொழிலாளர்களின் பிள்ளைகளும் அப் பகுதியில் உள்ள ஹொரன பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உரித்தான ஓல்ட்டன் ஸ்டோக்ஹோம் தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் பிள்ளைகளும் கல்வி கற்று வருகின்றனர்.குறிப்பிட்ட தேயிலை தொழிற்சாலைக்கும் தற்போது அமைந்துள்ள பாடசாலைக்கும் 5 மீட்டர் தூரம் கூட இல்லை அப் பகுதியில் கோப்பி அரைக்கும் தொழிற்சாலையை கவரவலை தோட்ட நிர்வாகம் அமைக்கும் பட்சத்தில் அந்த தொழிற்சாலையின் இயந்திரங்கள் இயங்கும் சத்தம் மற்றும் ஏனைய வாகனங்கள் வந்து செல்லும் சத்தம் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் சத்தம் பாடசாலைக்கு உகந்ததாக இல்லை.ஆகையால் கவரவலை தோட்ட தேயிலை தொழிற்சாலை அமைந்துள்ளது பகுதியில் கோப்பி அரைக்கும் தொழிற்சாலையை நிறுவ வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.தோட்ட நிர்வாகம் அதனை மறுக்கும் பட்சத்தில் நாளை 7 ம் திகதி முதல் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களை அப் பாடசாலையில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க பட உள்ளதாக பெற்றோர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.எதிர் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் பங்கு கொள்ள உள்ளனர் இதை தடுத்து நிறுத்த தோட்ட நிர்வாகம் மற்றும் ஹொரன பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உரித்தான உயர் அதிகாரிகள் பெருந்தோட்ட அமைச்சர் கல்வி அமைச்சர் மற்றும் நாட்டின் தலைவரான அதி மேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் முன் வர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் பாதிக்கப்பட்ட சாமிமலை பகுதியில் உள்ள கவரவலை தோட்ட மக்கள்.