அநுராதபுரம் - திறப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட A09 வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.
நிகவரெட்டியவிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து, திறப்பனை பகுதியில் திடீரென வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதியுள்ளது.
இதில் 12 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாரம்மல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று, மீண்டும் அநுராதபுரத்திற்கு திரும்பும் வழியிலேயே இந்த பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
பேருந்து சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் திறப்பனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதிகாலை நேரத்தில் நடந்த விபரீதம் - பேருந்தில் இருந்த 14 பேருக்கு என்ன நடந்தது அநுராதபுரம் - திறப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட A09 வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.நிகவரெட்டியவிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து, திறப்பனை பகுதியில் திடீரென வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதியுள்ளது.இதில் 12 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நாரம்மல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று, மீண்டும் அநுராதபுரத்திற்கு திரும்பும் வழியிலேயே இந்த பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.பேருந்து சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் திறப்பனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.