விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், திலீபனுக்கு எவ்வாறு நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின்போது அவர் இந்தக் கேள்வியை முன்வைத்தார்.
தான் ஒருபோதும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்பட்டதில்லை என்றும், இனவாதத்தை முன்னிலைப்படுத்தவில்லை என்றும் தெரிவித்தார்.தமிழ் பேசும் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு இடமளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் தொடர்ந்தும் உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த வாரம் வடக்கில் திலீபனுக்கு உருவச்சிலை அமைத்து நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டதாகவும், பின்னர் குறித்த சிலை அகற்றப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த பின்னர், அவருக்கு விடுதலைப் புலிகள் அமைப்பினால் இராணுவப் பதவி வழங்கப்பட்டதாகவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.
இந்நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், திலீபனுக்கு எவ்வாறு நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியும் என அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், தற்போது ஒரு தரப்பினர் திலீபன் நினைவேந்தல் தொடர்பில் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும், இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதையும் அவர் பாதுகாப்பு பிரதி அமைச்சரிடம் வினவினார்.
இதன்போது கருத்து தெரிவித்த பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர,
உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்வதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு; அதனை நாங்கள் தடுக்கவில்லை. இருப்பினும், தடைசெய்யப்பட்ட அமைப்புக்களை மீளுருவாக்கம் செய்யும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.
வடக்கு மற்றும் கிழக்கில் ஆயுத மோதல்கள் நிலவிய காலப்பகுதியில் செயற்பாட்டில் இருந்த 07 துணை ஆயுதக் குழுக்கள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுகின்றன என்று தெரிவித்தார்.
ஈ.பி.டி.பி. குழுவிடமிருந்து இராணுவத்தால் 161 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், டக்ளஸ் தேவானந்தாவுடன் தொடர்புடைய விசாரணைக்காக 30 ஆயுதங்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
புளொட் அமைப்பிடமிருந்து 23 ஆயுதங்களும், கருணா குழுவிடமிருந்து 615 ஆயுதங்களும் என்ற அடிப்படையில் மொத்தமாக 801 ஆயுதங்கள் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கை கடற்படைச் செயற்பாட்டுப் பிரதேசங்களில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகள் மற்றும் சோதனைகளின் போதும், புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலும் கண்டுபிடிக்கப்பட்ட 28 ஆயுதங்கள் பின்னர் கடற்படை ஆயுதத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்தத் துணை ஆயுதக் குழுக்களின் தலைவர்களும் அதன் பெரும்பாலான உறுப்பினர்களும் தற்போது செயற்பாட்டு அரசியல் நீரோட்டத்தில் பிரவேசித்துள்ளனர். மேலும், இந்தக் குழுக்களிடமிருந்து தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறதா என்பது தொடர்பில் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வடக்கில் திலீபனுக்குச் சிலை வைத்தமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற
திலீபன் நினைவேந்தல் குறித்து பாராளுமன்றத்தில் எழுந்த கேள்வி அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், திலீபனுக்கு எவ்வாறு நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின்போது அவர் இந்தக் கேள்வியை முன்வைத்தார்.தான் ஒருபோதும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்பட்டதில்லை என்றும், இனவாதத்தை முன்னிலைப்படுத்தவில்லை என்றும் தெரிவித்தார்.தமிழ் பேசும் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு இடமளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் தொடர்ந்தும் உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.கடந்த வாரம் வடக்கில் திலீபனுக்கு உருவச்சிலை அமைத்து நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டதாகவும், பின்னர் குறித்த சிலை அகற்றப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த பின்னர், அவருக்கு விடுதலைப் புலிகள் அமைப்பினால் இராணுவப் பதவி வழங்கப்பட்டதாகவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.இந்நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், திலீபனுக்கு எவ்வாறு நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியும் என அவர் கேள்வி எழுப்பினார்.மேலும், தற்போது ஒரு தரப்பினர் திலீபன் நினைவேந்தல் தொடர்பில் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும், இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதையும் அவர் பாதுகாப்பு பிரதி அமைச்சரிடம் வினவினார்.இதன்போது கருத்து தெரிவித்த பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர,உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்வதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு; அதனை நாங்கள் தடுக்கவில்லை. இருப்பினும், தடைசெய்யப்பட்ட அமைப்புக்களை மீளுருவாக்கம் செய்யும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. வடக்கு மற்றும் கிழக்கில் ஆயுத மோதல்கள் நிலவிய காலப்பகுதியில் செயற்பாட்டில் இருந்த 07 துணை ஆயுதக் குழுக்கள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுகின்றன என்று தெரிவித்தார்.ஈ.பி.டி.பி. குழுவிடமிருந்து இராணுவத்தால் 161 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், டக்ளஸ் தேவானந்தாவுடன் தொடர்புடைய விசாரணைக்காக 30 ஆயுதங்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.புளொட் அமைப்பிடமிருந்து 23 ஆயுதங்களும், கருணா குழுவிடமிருந்து 615 ஆயுதங்களும் என்ற அடிப்படையில் மொத்தமாக 801 ஆயுதங்கள் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.இலங்கை கடற்படைச் செயற்பாட்டுப் பிரதேசங்களில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகள் மற்றும் சோதனைகளின் போதும், புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலும் கண்டுபிடிக்கப்பட்ட 28 ஆயுதங்கள் பின்னர் கடற்படை ஆயுதத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.இந்தத் துணை ஆயுதக் குழுக்களின் தலைவர்களும் அதன் பெரும்பாலான உறுப்பினர்களும் தற்போது செயற்பாட்டு அரசியல் நீரோட்டத்தில் பிரவேசித்துள்ளனர். மேலும், இந்தக் குழுக்களிடமிருந்து தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறதா என்பது தொடர்பில் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.வடக்கில் திலீபனுக்குச் சிலை வைத்தமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற