• Oct 07 2026

வவுனியாவில் டீசல் தட்டுப்பாடு போகச் செய்கைக்கு காத்திருக்கும் விவசாயிகள்

dorin / Oct 7th 2026, 12:21 pm
image

வவுனியா மாவட்டத்தின் பல பகுதிகளில் தற்போது மழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில், விவசாயிகள் பெரும் எதிர்பார்ப்புடன் தங்களது போகச் செய்கைக்கான உழவு மற்றும் வயல் ஆயத்தப் பணிகளில் தீவிரமாக இறங்கி வருகின்றனர்.


மழைநீரைப் பயன்படுத்தி சரியான நேரத்தில் உழவு மற்றும் விதைப்புப் பணிகளை முடிக்க வேண்டிய இந்த முக்கியமான காலகட்டத்தில், மாவட்டத்தில் நிலவும் கடுமையான டீசல் தட்டுப்பாடு விவசாயிகளின் எதிர்பார்ப்பில் மண்ணை அள்ளிப்போடும் வகையில் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.


மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலைப் பெற்றுக்கொள்வதற்காக விவசாயிகள் காத்திருப்பதை காண முடிகிறது.


பெரும்பாலான நிரப்பு நிலையங்களில் "டீசல் இல்லை" என்ற பலகைகள் தொங்கவிடப்பட்டுள்ளதால், டிராக்டர்கள் மற்றும் உழவு இயந்திரங்களை இயக்க முடியாமல் விவசாயிகள் அன்றாட வயல் பணிகளை கைவிட்டு எரிபொருள் நிலையங்களை நோக்கி அலைய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மாவட்டத்தில் உண்மையில் டீசல் தட்டுப்பாடு நிலவுகிறதா அல்லது சில எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் லாபம் ஈட்டும் நோக்கில் டீசலை

ஓடர்களை மேற்கொள்ளாது செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்குகிறார்களா என்ற பலத்த சந்தேகமும் அச்சமும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் கேள்வியாக எழுந்துள்ளது.

மழை பெய்து நிலம் பதம் அடைந்துள்ள இந்தச் சரியான தருணத்தில் உழவுப் பணிகளைச் செய்யாவிட்டால் விவசாயப் பருவத்திற்கான உகந்த காலம் கைநழுவிப்போகும் என்பதால், இத்தகைய செயற்கை தட்டுப்பாடு குறித்த சந்தேகம் மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் டீசலைப் பெறுவதற்காக நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருப்பதாலும், சில இடங்களில் அதிக விலைக்கு வாங்க நேரிடுவதாலும் விவசாயத்திற்கான அடிப்படை உற்பத்திச் செலவுகளும் வெகுவாக உயர்ந்து வருகின்றன.

இந்த நிலை தொடர்ந்தால், பயிர் விளைச்சல் குறைந்து ஒட்டுமொத்த மாவட்டத்தின் உணவு உற்பத்தியும் பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்படும் என விவசாயிகள் எச்சரிக்கின்றனர்.

எனவே, மழை பெய்து வயல்கள் தயாராக இருக்கும் இந்த நேரத்தில், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முறைகேடுகள் ஏதும் இடம்பெறுகின்றதா என்பதைக் கண்டறிய அதிகாரிகள் உடனடியாகக் கள ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

வவுனியா மாவட்டத்திற்குத் தேவையான டீசல் விநியோகத்தைச் சீராக்குவதுடன், செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து, உழவு இயந்திரங்களுக்குத் தடையின்றி டீசல் கிடைக்க மாவட்ட நிர்வாகமும் எரிபொருள் கூட்டுத்தாபனமும் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.

வவுனியாவில் டீசல் தட்டுப்பாடு போகச் செய்கைக்கு காத்திருக்கும் விவசாயிகள் வவுனியா மாவட்டத்தின் பல பகுதிகளில் தற்போது மழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில், விவசாயிகள் பெரும் எதிர்பார்ப்புடன் தங்களது போகச் செய்கைக்கான உழவு மற்றும் வயல் ஆயத்தப் பணிகளில் தீவிரமாக இறங்கி வருகின்றனர்.மழைநீரைப் பயன்படுத்தி சரியான நேரத்தில் உழவு மற்றும் விதைப்புப் பணிகளை முடிக்க வேண்டிய இந்த முக்கியமான காலகட்டத்தில், மாவட்டத்தில் நிலவும் கடுமையான டீசல் தட்டுப்பாடு விவசாயிகளின் எதிர்பார்ப்பில் மண்ணை அள்ளிப்போடும் வகையில் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலைப் பெற்றுக்கொள்வதற்காக விவசாயிகள் காத்திருப்பதை காண முடிகிறது.பெரும்பாலான நிரப்பு நிலையங்களில் "டீசல் இல்லை" என்ற பலகைகள் தொங்கவிடப்பட்டுள்ளதால், டிராக்டர்கள் மற்றும் உழவு இயந்திரங்களை இயக்க முடியாமல் விவசாயிகள் அன்றாட வயல் பணிகளை கைவிட்டு எரிபொருள் நிலையங்களை நோக்கி அலைய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.அதேவேளை, மாவட்டத்தில் உண்மையில் டீசல் தட்டுப்பாடு நிலவுகிறதா அல்லது சில எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் லாபம் ஈட்டும் நோக்கில் டீசலைஓடர்களை மேற்கொள்ளாது செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்குகிறார்களா என்ற பலத்த சந்தேகமும் அச்சமும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் கேள்வியாக எழுந்துள்ளது.மழை பெய்து நிலம் பதம் அடைந்துள்ள இந்தச் சரியான தருணத்தில் உழவுப் பணிகளைச் செய்யாவிட்டால் விவசாயப் பருவத்திற்கான உகந்த காலம் கைநழுவிப்போகும் என்பதால், இத்தகைய செயற்கை தட்டுப்பாடு குறித்த சந்தேகம் மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.மேலும் டீசலைப் பெறுவதற்காக நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருப்பதாலும், சில இடங்களில் அதிக விலைக்கு வாங்க நேரிடுவதாலும் விவசாயத்திற்கான அடிப்படை உற்பத்திச் செலவுகளும் வெகுவாக உயர்ந்து வருகின்றன.இந்த நிலை தொடர்ந்தால், பயிர் விளைச்சல் குறைந்து ஒட்டுமொத்த மாவட்டத்தின் உணவு உற்பத்தியும் பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்படும் என விவசாயிகள் எச்சரிக்கின்றனர்.எனவே, மழை பெய்து வயல்கள் தயாராக இருக்கும் இந்த நேரத்தில், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முறைகேடுகள் ஏதும் இடம்பெறுகின்றதா என்பதைக் கண்டறிய அதிகாரிகள் உடனடியாகக் கள ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.வவுனியா மாவட்டத்திற்குத் தேவையான டீசல் விநியோகத்தைச் சீராக்குவதுடன், செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து, உழவு இயந்திரங்களுக்குத் தடையின்றி டீசல் கிடைக்க மாவட்ட நிர்வாகமும் எரிபொருள் கூட்டுத்தாபனமும் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.

Advertisement

Advertisement

Advertisement