சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் உயிரிழப்பு தொடர்பான பகிடிவதை குற்றச்சாட்டில், 11 மாணவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி பயின்ற 23 வயதான சரித் திலீஷான், 2023 ஏப்ரல் 29ஆம் திகதி தனது வீட்டில் உயிரிழந்திருந்தார்.
இச் சம்பவம் அந்நாட்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கடுமையான பகிடிவதை மற்றும் உடல், உள ரீதியான துன்புறுத்தல்களை தாங்கிக்கொள்ள முடியாத நிலையிலேயே அவர் இந்த முடிவை எடுத்ததாக அவரது பெற்றோர் தெரிவித்திருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த மாணவருக்கும் ஏனைய மாணவர்களுக்கும் துன்புறுத்தல், உடல் மற்றும் உள ரீதியான அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட கடுமையான ஒழுக்காற்று விதிமீறல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பான விசாரணை அறிக்கை கடந்த வாரம் வெளியிடப்பட்டது.
அதனை அடிப்படையாகக் கொண்டு 11 மாணவர்களின் பல்கலைக்கழகப் பதிவு நிரந்தரமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக வளாகம், மாணவர் விடுதிகள் உள்ளிட்ட பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான எந்த இடத்திற்கும் துணைவேந்தரின் எழுத்துமூல அனுமதியின்றி அவர்கள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சம்பவம் தொடர்பில் 14 மாணவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சரித் திலீஷான் உயிரிழப்பு; பகிடிவதை குற்றச்சாட்டு உண்மையா 11 மாணவர்களுக்கு விழுந்தது பேரிடி சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் உயிரிழப்பு தொடர்பான பகிடிவதை குற்றச்சாட்டில், 11 மாணவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி பயின்ற 23 வயதான சரித் திலீஷான், 2023 ஏப்ரல் 29ஆம் திகதி தனது வீட்டில் உயிரிழந்திருந்தார்.இச் சம்பவம் அந்நாட்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கடுமையான பகிடிவதை மற்றும் உடல், உள ரீதியான துன்புறுத்தல்களை தாங்கிக்கொள்ள முடியாத நிலையிலேயே அவர் இந்த முடிவை எடுத்ததாக அவரது பெற்றோர் தெரிவித்திருந்தனர்.இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.இந்நிலையில் குறித்த மாணவருக்கும் ஏனைய மாணவர்களுக்கும் துன்புறுத்தல், உடல் மற்றும் உள ரீதியான அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட கடுமையான ஒழுக்காற்று விதிமீறல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பான விசாரணை அறிக்கை கடந்த வாரம் வெளியிடப்பட்டது.அதனை அடிப்படையாகக் கொண்டு 11 மாணவர்களின் பல்கலைக்கழகப் பதிவு நிரந்தரமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.பல்கலைக்கழக வளாகம், மாணவர் விடுதிகள் உள்ளிட்ட பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான எந்த இடத்திற்கும் துணைவேந்தரின் எழுத்துமூல அனுமதியின்றி அவர்கள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், சம்பவம் தொடர்பில் 14 மாணவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.