• Oct 07 2026

யாழில் மீண்டும் மதுபானசாலை சர்ச்சையா? 4 இடங்களில் பணம் செலுத்தப்பட்டதா? - மக்களிடையே அதிர்ச்சி

Chithra / Oct 7th 2026, 12:43 pm
image


பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட 9 மாத சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.


இந்நிலையில் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது சிறைச்சாலைத் திணைக்களம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக இன்று (07) புதன்கிழமை அமைதிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.


உலப்பனே ஸ்ரீ சுமங்கல தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.


மேலும், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமக்ரிதர்ம மகா சங்க சபையின் அனுநாயக்கர் அதி.வண. பேராசிரியர் கொட்டபிட்டியே ராகுல அனுநாயக்க தேரர் தலைமையிலான பிக்குகள் குழுவொன்றும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தது.


இதனிடையே, ஞானசார தேரருக்கு சார்பாக நீதிமன்றத்திற்கு வந்திருந்த இரண்டு பிக்குகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


அத்துடன், சில பௌத்த பிக்குகளுக்கு நீதிமன்ற வளாகத்துக்குள் செல்ல பொலிஸார் அனுமதி மறுத்ததாகவும், இதன்போது அவர்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மறுபுறம், ஞானசார தேரர் இன்று கைதிகளுக்கான சிறைச்சாலைச் சீருடை அணிந்த நிலையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.


நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவரது காவி உடைகள் களையப்பட்டு சிறைச்சாலைச் சீருடை அணிவிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


மதமொன்றை அவமதிக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்ட குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக முன்னதாகப் பிறப்பிக்கப்பட்ட பகிரங்க பிடியாணையின் அடிப்படையில் அண்மையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.


இதன்போது, நீதவான் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 9 மாத சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்ததுடன், தண்டனையில் எஞ்சியுள்ள காலப்பகுதியை உடனடியாக அமுல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு உத்தரவிட்டது.

யாழில் மீண்டும் மதுபானசாலை சர்ச்சையா 4 இடங்களில் பணம் செலுத்தப்பட்டதா - மக்களிடையே அதிர்ச்சி பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட 9 மாத சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.இந்நிலையில் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது சிறைச்சாலைத் திணைக்களம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக இன்று (07) புதன்கிழமை அமைதிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.உலப்பனே ஸ்ரீ சுமங்கல தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.மேலும், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமக்ரிதர்ம மகா சங்க சபையின் அனுநாயக்கர் அதி.வண. பேராசிரியர் கொட்டபிட்டியே ராகுல அனுநாயக்க தேரர் தலைமையிலான பிக்குகள் குழுவொன்றும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தது.இதனிடையே, ஞானசார தேரருக்கு சார்பாக நீதிமன்றத்திற்கு வந்திருந்த இரண்டு பிக்குகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.அத்துடன், சில பௌத்த பிக்குகளுக்கு நீதிமன்ற வளாகத்துக்குள் செல்ல பொலிஸார் அனுமதி மறுத்ததாகவும், இதன்போது அவர்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மறுபுறம், ஞானசார தேரர் இன்று கைதிகளுக்கான சிறைச்சாலைச் சீருடை அணிந்த நிலையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவரது காவி உடைகள் களையப்பட்டு சிறைச்சாலைச் சீருடை அணிவிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.மதமொன்றை அவமதிக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்ட குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக முன்னதாகப் பிறப்பிக்கப்பட்ட பகிரங்க பிடியாணையின் அடிப்படையில் அண்மையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.இதன்போது, நீதவான் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 9 மாத சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்ததுடன், தண்டனையில் எஞ்சியுள்ள காலப்பகுதியை உடனடியாக அமுல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

Advertisement