யாழ்ப்பாணம் மாநகரசபையினால் யாழ்ப்பாணம் நகரத்தில் பேருந்துநிலையத்திற்குள் பொது மக்களுக்காக நவீனவசதிகளுடன் அமைக்கப்பட்டு நீண்டகாலமாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல் காணப்படும் மலசலகூடத்தை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு முதல்வர் வி.மதிவதனி அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது தொடர்பில் பல்வேறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் யாழ்ப்பாணம் மாநகரசபைக்கும் - இ.போ.ச விற்கும் இடையில் இடம்பெற்றும் இழுபறி நிலை காணப்பட்ட நிலையில் விசேட கலந்துரையாடல் ஒன்று (2) முதல்வர் மதிவதனி அவர்களின் தலைமையில் மாநகரசபையில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் முதல்வரின் அழைப்பில் வடக்குமாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் உயர்திரு.ஜே.விவேகானந்தன் அவர்களும் கலந்து கொண்டிருந்ததுடன், மலசல கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த முதல்வர் மதிவதனி அவர்கள் புதிய மலசலகூட விவகாரத்தில் கடந்தகால இழுபறி நிலைகளை கடந்து பொது மக்களின் நலனை கவனத்திற் கொண்டு பொது மக்களுக்கு சேவைகளை வழங்கும் இரு தரப்பினரும் உடன்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து அக்கறை கொள்ள வேண்டும் என்று முதல்வர் குறிப்பிட்டார்.
இரு தரப்பினரிரும் மக்கள் நலனை கவனத்திற் கொண்டு இணக்கப்பாட்டிற்கு வர வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, நீண்ட கலந்துரையாடலை மேற்கொண்டதுடன், மாநகரசபை மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை ஆகிய இரு தரப்பினர்க்கும் இடையே இணக்கப்பட்டுடன் ஒரு உடன்படிக்கையை மேற்கொள்வதற்கும், இது தொடர்பில் பொதுக்கூட்டத்தில் பிரஸ்தாபித்து சபையின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் உடன்டிக்கையை உரிய மாநகர நடைமுறைக்கு அமைவாக மேற்கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
நீண்டகாலமாக பல்வேறு துறைசார் தொடர்புடைய மட்டங்களிலும் முயற்சித்தும் முடிவுகான முடியாத மேற்படி மலசலகூடத்தின் தொடர் இழுபறி நிலையை புதிய சபை பொறுப்பேற்றதிலிருந்து முதல்வர் மதிவதனி அவர்கள் தொடர் முயற்சியின் பயனாக சபையின் கவனத்திற்கு கொண்டு சென்றும், இரு தரப்பு உடன்படிக்கைக்கு கொண்டு வந்தும் தீர்ப்பதற்கு சிறந்த இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதானது விரைவில் மலசல கூடம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்பதையே எடுத்துக் காட்டுகின்றது எனலாம்.
மேற்படி முதல்வர் மதிவதனி அவர்கள் முயற்சி மற்றும் இரு தரப்பு இனக்கப்பாடு, உடன்படிக்கை ஊடான நிரந்தர தீர்வு முயற்சிகளுக்கு பொதுச் சபை சரியான புரிதலுடன், மக்களின் தேவையையும், அவசியத்தை உணர்ந்தும் உரிய அனுமதிகளை வழங்கும் என்றும் எதிர்பார்ப்பதாக முதல்வர் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேற்படி கலந்துரையாடலில் மாநகர பிரதி முதல்வர், மராமத்துக்குழு தலைவர், சுகாதாரக்குழு தலைவர், ஆணையாளர், பிரதம பொறியியலாளர், பிரதம கணக்காளர், இ.போ.ச முகாமையாளர் உள்ளிட்ட நிர்வாகத்தினர், துறைசார் மாநகர உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாகும்.
பேருந்து நிலைய மலசலகூடம் விரைவில் பயன்பாட்டிற்கு முதல்வர் மதிவதனி நடவடிக்கை யாழ்ப்பாணம் மாநகரசபையினால் யாழ்ப்பாணம் நகரத்தில் பேருந்துநிலையத்திற்குள் பொது மக்களுக்காக நவீனவசதிகளுடன் அமைக்கப்பட்டு நீண்டகாலமாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல் காணப்படும் மலசலகூடத்தை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு முதல்வர் வி.மதிவதனி அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.இது தொடர்பில் பல்வேறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் யாழ்ப்பாணம் மாநகரசபைக்கும் - இ.போ.ச விற்கும் இடையில் இடம்பெற்றும் இழுபறி நிலை காணப்பட்ட நிலையில் விசேட கலந்துரையாடல் ஒன்று (2) முதல்வர் மதிவதனி அவர்களின் தலைமையில் மாநகரசபையில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் முதல்வரின் அழைப்பில் வடக்குமாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் உயர்திரு.ஜே.விவேகானந்தன் அவர்களும் கலந்து கொண்டிருந்ததுடன், மலசல கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார். இதன் போது கருத்து தெரிவித்த முதல்வர் மதிவதனி அவர்கள் புதிய மலசலகூட விவகாரத்தில் கடந்தகால இழுபறி நிலைகளை கடந்து பொது மக்களின் நலனை கவனத்திற் கொண்டு பொது மக்களுக்கு சேவைகளை வழங்கும் இரு தரப்பினரும் உடன்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து அக்கறை கொள்ள வேண்டும் என்று முதல்வர் குறிப்பிட்டார்.இரு தரப்பினரிரும் மக்கள் நலனை கவனத்திற் கொண்டு இணக்கப்பாட்டிற்கு வர வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, நீண்ட கலந்துரையாடலை மேற்கொண்டதுடன், மாநகரசபை மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை ஆகிய இரு தரப்பினர்க்கும் இடையே இணக்கப்பட்டுடன் ஒரு உடன்படிக்கையை மேற்கொள்வதற்கும், இது தொடர்பில் பொதுக்கூட்டத்தில் பிரஸ்தாபித்து சபையின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் உடன்டிக்கையை உரிய மாநகர நடைமுறைக்கு அமைவாக மேற்கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.நீண்டகாலமாக பல்வேறு துறைசார் தொடர்புடைய மட்டங்களிலும் முயற்சித்தும் முடிவுகான முடியாத மேற்படி மலசலகூடத்தின் தொடர் இழுபறி நிலையை புதிய சபை பொறுப்பேற்றதிலிருந்து முதல்வர் மதிவதனி அவர்கள் தொடர் முயற்சியின் பயனாக சபையின் கவனத்திற்கு கொண்டு சென்றும், இரு தரப்பு உடன்படிக்கைக்கு கொண்டு வந்தும் தீர்ப்பதற்கு சிறந்த இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதானது விரைவில் மலசல கூடம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்பதையே எடுத்துக் காட்டுகின்றது எனலாம்.மேற்படி முதல்வர் மதிவதனி அவர்கள் முயற்சி மற்றும் இரு தரப்பு இனக்கப்பாடு, உடன்படிக்கை ஊடான நிரந்தர தீர்வு முயற்சிகளுக்கு பொதுச் சபை சரியான புரிதலுடன், மக்களின் தேவையையும், அவசியத்தை உணர்ந்தும் உரிய அனுமதிகளை வழங்கும் என்றும் எதிர்பார்ப்பதாக முதல்வர் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.மேற்படி கலந்துரையாடலில் மாநகர பிரதி முதல்வர், மராமத்துக்குழு தலைவர், சுகாதாரக்குழு தலைவர், ஆணையாளர், பிரதம பொறியியலாளர், பிரதம கணக்காளர், இ.போ.ச முகாமையாளர் உள்ளிட்ட நிர்வாகத்தினர், துறைசார் மாநகர உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாகும்.