நெடுந்தீவு – யாழ்ப்பாணம் கடல் மார்க்கத்தில் ஒரே நேரத்தில் சுமார் 150 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய புதிய பயணிகள் படகை சேவையில் ஈடுபடுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பிரஜா சக்தி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இந்தப் புதிய ‘Sea Ferry’ படகு சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் பிரதான நிலப்பகுதிக்கும் நெடுந்தீவு உள்ளிட்ட வெளித்தீவுகளுக்கும் இடையிலான கடல் போக்குவரத்தில், அதிக எண்ணிக்கையிலான பயணிகளை ஒரே நேரத்தில் பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கான போதிய வசதிகள் இல்லாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, சுமார் 150 பயணிகளை ஒரே நேரத்தில் ஏற்றிச் செல்லக்கூடிய பயணிகள் படகொன்றை நெடுந்தீவு – யாழ்ப்பாணம் கடல் மார்க்கத்தில் சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த படகு சினோர் நிறுவனத்தினால் தயாரிக்கப்படவுள்ளதாகவும், அதன் இயக்க நடவடிக்கைகள் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள நெடுந்தீவு அபிவிருத்திச் சங்கத்தின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தப் படகு சேவையின் மூலம் கிடைக்கும் வருமானத்தை, சங்கத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கடற்றொழில், நீர்வள மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
150 பயணிகளுடன் புதிய ‘Sea Ferry’ - நெடுந்தீவு – யாழ்ப்பாணம் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி நெடுந்தீவு – யாழ்ப்பாணம் கடல் மார்க்கத்தில் ஒரே நேரத்தில் சுமார் 150 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய புதிய பயணிகள் படகை சேவையில் ஈடுபடுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.பிரஜா சக்தி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இந்தப் புதிய ‘Sea Ferry’ படகு சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.யாழ்ப்பாணம் பிரதான நிலப்பகுதிக்கும் நெடுந்தீவு உள்ளிட்ட வெளித்தீவுகளுக்கும் இடையிலான கடல் போக்குவரத்தில், அதிக எண்ணிக்கையிலான பயணிகளை ஒரே நேரத்தில் பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கான போதிய வசதிகள் இல்லாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை கருத்தில் கொண்டு, சுமார் 150 பயணிகளை ஒரே நேரத்தில் ஏற்றிச் செல்லக்கூடிய பயணிகள் படகொன்றை நெடுந்தீவு – யாழ்ப்பாணம் கடல் மார்க்கத்தில் சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.குறித்த படகு சினோர் நிறுவனத்தினால் தயாரிக்கப்படவுள்ளதாகவும், அதன் இயக்க நடவடிக்கைகள் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள நெடுந்தீவு அபிவிருத்திச் சங்கத்தின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்தப் படகு சேவையின் மூலம் கிடைக்கும் வருமானத்தை, சங்கத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.கடற்றொழில், நீர்வள மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.