தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இப்பாகமுவ பகுதியில் நேற்று (11) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக உலக சந்தையில் டீசல் மற்றும் பெற்றோலின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், எரிபொருள் விலை அதிகரிப்பின் சுமையை பொதுமக்கள் மீது முழுமையாகச் சுமத்தாமல் இருப்பதற்காக அரசாங்கம் பல்வேறு நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் முதல் டீசல் லீட்டர் ஒன்றுக்கு 100 ரூபா வீதம் மானியம் வழங்கப்பட்டதாகவும், ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு லீட்டர் ஒன்றுக்கு 70 ரூபா வீதம் மானியம் வழங்கப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை இலாபகரமான நிறுவனமாக மாற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த காலங்களைப் போன்று அதிகளவான ஊழியர்களை நியமிக்காமல், பொறியியலாளர்கள் உள்ளிட்ட 10 பேரை மாத்திரமே புதிதாக இணைத்துக்கொண்டு நிறுவனம் திறம்பட நிர்வகிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்து வரும் நிலையில், தனியார் எரிபொருள் நிறுவனங்கள் விலைகளை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
அதன்படி, ஒரு தனியார் நிறுவனம் டீசல் லீட்டர் ஒன்றின் விலையை 132 ரூபாவாலும், மற்றுமொரு நிறுவனம் 116 ரூபாவாலும் அதிகரிக்குமாறு கோரியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும், அந்தக் கோரிக்கைகளுக்கு இணங்காமல், லீட்டருக்கு 70 ரூபா மானியம் வழங்கி, 10 ரூபா மாத்திரமே விலையை அதிகரித்ததன் மூலம் மக்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
விலைகளை அதிகரிக்காவிட்டால் எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்ளப்போவதில்லை என சில தனியார் நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
எனினும், கடந்த காலங்களில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் அந்த நிறுவனங்களுக்கு இவ்வாறான தீர்மானங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளதால், அவற்றுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாத நிலை காணப்படுவதாக அவர் விளக்கமளித்தார்.
இதனைக் கருத்திற்கொண்டு, தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மீண்டும் திருத்தியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்தார்.
மேலும், உலகளாவிய போர்ச் சூழல் மற்றும் பணவீக்கம் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள தாக்கத்தைக் குறைப்பதற்கும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
இலங்கையில் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்குமா ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.இப்பாகமுவ பகுதியில் நேற்று (11) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக உலக சந்தையில் டீசல் மற்றும் பெற்றோலின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.இருப்பினும், எரிபொருள் விலை அதிகரிப்பின் சுமையை பொதுமக்கள் மீது முழுமையாகச் சுமத்தாமல் இருப்பதற்காக அரசாங்கம் பல்வேறு நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் முதல் டீசல் லீட்டர் ஒன்றுக்கு 100 ரூபா வீதம் மானியம் வழங்கப்பட்டதாகவும், ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு லீட்டர் ஒன்றுக்கு 70 ரூபா வீதம் மானியம் வழங்கப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.தற்போதைய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை இலாபகரமான நிறுவனமாக மாற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.கடந்த காலங்களைப் போன்று அதிகளவான ஊழியர்களை நியமிக்காமல், பொறியியலாளர்கள் உள்ளிட்ட 10 பேரை மாத்திரமே புதிதாக இணைத்துக்கொண்டு நிறுவனம் திறம்பட நிர்வகிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்து வரும் நிலையில், தனியார் எரிபொருள் நிறுவனங்கள் விலைகளை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.அதன்படி, ஒரு தனியார் நிறுவனம் டீசல் லீட்டர் ஒன்றின் விலையை 132 ரூபாவாலும், மற்றுமொரு நிறுவனம் 116 ரூபாவாலும் அதிகரிக்குமாறு கோரியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.எனினும், அந்தக் கோரிக்கைகளுக்கு இணங்காமல், லீட்டருக்கு 70 ரூபா மானியம் வழங்கி, 10 ரூபா மாத்திரமே விலையை அதிகரித்ததன் மூலம் மக்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.விலைகளை அதிகரிக்காவிட்டால் எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்ளப்போவதில்லை என சில தனியார் நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.எனினும், கடந்த காலங்களில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் அந்த நிறுவனங்களுக்கு இவ்வாறான தீர்மானங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளதால், அவற்றுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாத நிலை காணப்படுவதாக அவர் விளக்கமளித்தார்.இதனைக் கருத்திற்கொண்டு, தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மீண்டும் திருத்தியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்தார்.மேலும், உலகளாவிய போர்ச் சூழல் மற்றும் பணவீக்கம் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள தாக்கத்தைக் குறைப்பதற்கும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.