• Oct 12 2026

39 ஆண்டுள் கடந்தாலும் மறக்க முடியாத படுகொலை – பிரம்படியில் திரண்ட உறவுகள்!

Chithra / Oct 12th 2026, 12:16 pm
image


யாழ்ப்பாணம் – கொக்குவில் பிரம்படிப் பகுதியில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 50க்கும் மேற்பட்ட பொதுமக்களின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (12) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.


கொக்குவில் பிரம்படிப் பகுதியில் அமைந்துள்ள நினைவுத் தூபியருகில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.


இதன்போது, படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் வகையில் நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.


இந்நிகழ்வில் சிவகுரு ஆதீன குரு முதல்வர் வேலன் சுவாமிகள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், யாழ். மாநகர முன்னாள் முதல்வர் வி. மணிவண்ணன், யாழ். மாநகர சபை உறுப்பினர்கள், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

39 ஆண்டுள் கடந்தாலும் மறக்க முடியாத படுகொலை – பிரம்படியில் திரண்ட உறவுகள் யாழ்ப்பாணம் – கொக்குவில் பிரம்படிப் பகுதியில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 50க்கும் மேற்பட்ட பொதுமக்களின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (12) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.கொக்குவில் பிரம்படிப் பகுதியில் அமைந்துள்ள நினைவுத் தூபியருகில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.இதன்போது, படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் வகையில் நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்நிகழ்வில் சிவகுரு ஆதீன குரு முதல்வர் வேலன் சுவாமிகள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், யாழ். மாநகர முன்னாள் முதல்வர் வி. மணிவண்ணன், யாழ். மாநகர சபை உறுப்பினர்கள், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Advertisement

Advertisement

Advertisement