• Oct 14 2026

சவூதி விமான நிலையத்தில் பயங்கரத் தாக்குதல் – 12 பேர் பலி - பலர் கவலைக்கிடம்: மூடப்படும் வான்வெளிகள்

Chithra / Oct 11th 2026, 12:33 pm
image


சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் அமரும் முனையப் பகுதியே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில், இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


தாக்குதலைத் தொடர்ந்து விமான நிலையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், ரியாத்துக்கான விமானங்கள் மாற்றுப் பாதைகளில் திருப்பிவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இதற்கிடையில், இந்தத் தாக்குதலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 309 பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


உயிரிழந்தவர்களில் நான்கு சவூதி பிரஜைகள், இரண்டு பங்களாதேஷ் பிரஜைகள் மற்றும் அமெரிக்கா, ஜோர்டான், பாலஸ்தீனம், சிரியா, சூடான், எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவரும் அடங்குவதாகக் கூறப்படுகிறது.


காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தத் தாக்குதலுக்கு ஹூதி கிளர்ச்சியாளர்களே காரணம் எனக் குற்றஞ்சாட்டியுள்ள சவூதி தலைமையிலான இராணுவக் கூட்டிணைவுப் படையின் பேச்சாளர், இதற்குத் தகுந்த பதிலடி வழங்கப்படும் என எச்சரித்துள்ளார்.


அதேவேளை, அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ தாக்குதலைக் கண்டித்துள்ளதாகவும், அமெரிக்கப் பிரஜை ஒருவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


சவூதியில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள், நிலைமை சீராகும் வரை விமான நிலையப் பகுதியைத் தவிர்க்குமாறு தமது பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.


யேமனில் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தத் தாக்குதல் தொடர்பான தகவல்கள் பிராந்தியத்தின் பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்துள்ளன.

சவூதி விமான நிலையத்தில் பயங்கரத் தாக்குதல் – 12 பேர் பலி - பலர் கவலைக்கிடம்: மூடப்படும் வான்வெளிகள் சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் அமரும் முனையப் பகுதியே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில், இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.தாக்குதலைத் தொடர்ந்து விமான நிலையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், ரியாத்துக்கான விமானங்கள் மாற்றுப் பாதைகளில் திருப்பிவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இதற்கிடையில், இந்தத் தாக்குதலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 309 பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர்களில் நான்கு சவூதி பிரஜைகள், இரண்டு பங்களாதேஷ் பிரஜைகள் மற்றும் அமெரிக்கா, ஜோர்டான், பாலஸ்தீனம், சிரியா, சூடான், எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவரும் அடங்குவதாகக் கூறப்படுகிறது.காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் தாக்குதலுக்கு ஹூதி கிளர்ச்சியாளர்களே காரணம் எனக் குற்றஞ்சாட்டியுள்ள சவூதி தலைமையிலான இராணுவக் கூட்டிணைவுப் படையின் பேச்சாளர், இதற்குத் தகுந்த பதிலடி வழங்கப்படும் என எச்சரித்துள்ளார்.அதேவேளை, அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ தாக்குதலைக் கண்டித்துள்ளதாகவும், அமெரிக்கப் பிரஜை ஒருவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.சவூதியில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள், நிலைமை சீராகும் வரை விமான நிலையப் பகுதியைத் தவிர்க்குமாறு தமது பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.யேமனில் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தத் தாக்குதல் தொடர்பான தகவல்கள் பிராந்தியத்தின் பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்துள்ளன.

Advertisement

Advertisement

Advertisement