• Oct 14 2026

இரவில் யாழ். பேருந்து நிலையத்தில் நடப்பது என்ன? பயணிகள் முன்வைக்கும் பகீர் குற்றச்சாட்டு!

Chithra / Oct 13th 2026, 1:16 pm
image


யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு இரவு நேரங்களில் வருகை தரும் பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.


குறிப்பாக, நள்ளிரவுக்குப் பின்னர் வெளி மாவட்டங்களிலிருந்து யாழ்ப்பாணத்தை வந்தடையும் பயணிகள், சில முச்சக்கரவண்டி சாரதிகளால் அச்சுறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


நீண்ட தூரப் பயணத்தை முடித்துக்கொண்டு வரும் பயணிகள், தமது வீடுகளுக்குச் செல்வதற்காக சொந்த வாகனங்கள் அல்லது PickMe, Uber போன்ற வாடகை வாகனங்களை முன்பதிவு செய்கின்றனர்.


ஆனால், இவ்வாறு வரும் வாகனங்களின் சாரதிகளுடனும் பயணிகளுடனும் சில முச்சக்கரவண்டி சாரதிகள் முரண்படுவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.


அத்துடன், பயணிகளைத் தமது முச்சக்கரவண்டிகளிலேயே ஏறுமாறு வற்புறுத்துவதாகவும், உறவினர்களை அழைத்துச் செல்ல வருபவர்களுக்கும் இடையூறு ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இதற்கிடையில் மற்றுமொரு முக்கிய குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.


இரவு நேரத்தைக் காரணமாகக் கொண்டு சில முச்சக்கரவண்டி சாரதிகள் அதிக கட்டணம் அறவிடுவதாகவும், முன்பதிவு வாடகை வாகனங்களில் குறைந்த கட்டணத்தில் பயணிக்க முடிவதாகவும் பயணிகள் கூறுகின்றனர்.


இதனால், நீண்ட தூரப் பயணத்தால் களைப்படைந்து வரும் மக்கள் மேலதிக பணச்சுமையையும் அசௌகரியங்களையும் எதிர்கொள்வதாகக் கவலை வெளியிட்டுள்ளனர்.


இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுவதாகப் பயணிகள் சுட்டிக்காட்டும் நிலையில், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம், யாழ். மாவட்டச் செயலகம் மற்றும் பொலிஸார் உரிய கவனம் செலுத்துவதில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.


இந்நிலையில், பயணிகளின் பாதுகாப்பையும் தமக்கான வாகனத்தைத் தெரிவுசெய்யும் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்த பொலிஸார், மாவட்டச் செயலகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இரவில் யாழ். பேருந்து நிலையத்தில் நடப்பது என்ன பயணிகள் முன்வைக்கும் பகீர் குற்றச்சாட்டு யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு இரவு நேரங்களில் வருகை தரும் பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.குறிப்பாக, நள்ளிரவுக்குப் பின்னர் வெளி மாவட்டங்களிலிருந்து யாழ்ப்பாணத்தை வந்தடையும் பயணிகள், சில முச்சக்கரவண்டி சாரதிகளால் அச்சுறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.நீண்ட தூரப் பயணத்தை முடித்துக்கொண்டு வரும் பயணிகள், தமது வீடுகளுக்குச் செல்வதற்காக சொந்த வாகனங்கள் அல்லது PickMe, Uber போன்ற வாடகை வாகனங்களை முன்பதிவு செய்கின்றனர்.ஆனால், இவ்வாறு வரும் வாகனங்களின் சாரதிகளுடனும் பயணிகளுடனும் சில முச்சக்கரவண்டி சாரதிகள் முரண்படுவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.அத்துடன், பயணிகளைத் தமது முச்சக்கரவண்டிகளிலேயே ஏறுமாறு வற்புறுத்துவதாகவும், உறவினர்களை அழைத்துச் செல்ல வருபவர்களுக்கும் இடையூறு ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இதற்கிடையில் மற்றுமொரு முக்கிய குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.இரவு நேரத்தைக் காரணமாகக் கொண்டு சில முச்சக்கரவண்டி சாரதிகள் அதிக கட்டணம் அறவிடுவதாகவும், முன்பதிவு வாடகை வாகனங்களில் குறைந்த கட்டணத்தில் பயணிக்க முடிவதாகவும் பயணிகள் கூறுகின்றனர்.இதனால், நீண்ட தூரப் பயணத்தால் களைப்படைந்து வரும் மக்கள் மேலதிக பணச்சுமையையும் அசௌகரியங்களையும் எதிர்கொள்வதாகக் கவலை வெளியிட்டுள்ளனர்.இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுவதாகப் பயணிகள் சுட்டிக்காட்டும் நிலையில், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம், யாழ். மாவட்டச் செயலகம் மற்றும் பொலிஸார் உரிய கவனம் செலுத்துவதில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.இந்நிலையில், பயணிகளின் பாதுகாப்பையும் தமக்கான வாகனத்தைத் தெரிவுசெய்யும் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்த பொலிஸார், மாவட்டச் செயலகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement