நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொம்மைகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான நவராத்திரி கொலு பார்வையாளர்களை வெகுவாகக் கவரும் வகையில் அமைந்துள்ளது.
கோண்டாவில் ஈழத்து சபரிமலை ஐயப்பன் ஆலயத்தின் பிரதம குருவான ஹரிஹர சுதக் குருக்களின் இல்லமான ‘சாய் சபரீசன் இல்லத்தில்’ இந்த நவராத்திரி கொலு அமைக்கப்பட்டுள்ளது.
இறைத் திருவுருவங்கள், புராண இதிகாசக் கதைகள், வரலாற்றுச் சம்பவங்கள் மற்றும் பலரும் அறிந்திராத அரிய தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொம்மைகள் மூலம் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கலைநயத்துடனும் மிகுந்த நேர்த்தியுடனும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கொலு, பார்வையாளர்களுக்கு வியப்பூட்டும் அனுபவத்தை வழங்குவதுடன், தமிழர்களின் பண்பாடு, பாரம்பரியம், ஆன்மிகம் மற்றும் வரலாற்றுச் சிறப்புகளையும் எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது.
குறிப்பாக, வெறுமனே பொம்மைகளை அடுக்கி வைக்கும் நிகழ்வாக அல்லாமல், புராண இதிகாசங்களையும் வரலாற்று நிகழ்வுகளையும் காட்சிகளின் ஊடாக அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்கும் முயற்சியாகவும் இந்தக் கொலு அமைந்துள்ளமை சிறப்பம்சமாகும்.
மேலும், பாடசாலை மாணவர்களும் சிறுவர்களும் புத்தகங்களில் படித்தறியும் புராணக் கதைகளையும் வரலாற்று நிகழ்வுகளையும் நேரடியாகக் காட்சிகளாகப் பார்வையிட்டு அறிந்துகொள்ளும் வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பிரம்மாண்ட நவராத்திரி கொலுவை ஒன்பது நாட்களுக்குப் பொதுமக்கள் நேரில் சென்று பார்வையிட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மாலை நேரங்களில் நடைபெறும் கும்ப பூஜைகளிலும் பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறான பிரம்மாண்டமான நவராத்திரி கொலு அமைப்பு அரிதாகக் காணப்படும் நிலையில், யாழ்ப்பாணம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் பக்தர்களும் இதனை நேரில் சென்று பார்வையிடுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
யாழில் அனைவரையும் வியக்கவைக்கும் பிரம்மாண்ட கொலு; அப்படி என்ன சிறப்பு நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொம்மைகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான நவராத்திரி கொலு பார்வையாளர்களை வெகுவாகக் கவரும் வகையில் அமைந்துள்ளது.கோண்டாவில் ஈழத்து சபரிமலை ஐயப்பன் ஆலயத்தின் பிரதம குருவான ஹரிஹர சுதக் குருக்களின் இல்லமான ‘சாய் சபரீசன் இல்லத்தில்’ இந்த நவராத்திரி கொலு அமைக்கப்பட்டுள்ளது.இறைத் திருவுருவங்கள், புராண இதிகாசக் கதைகள், வரலாற்றுச் சம்பவங்கள் மற்றும் பலரும் அறிந்திராத அரிய தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொம்மைகள் மூலம் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.கலைநயத்துடனும் மிகுந்த நேர்த்தியுடனும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கொலு, பார்வையாளர்களுக்கு வியப்பூட்டும் அனுபவத்தை வழங்குவதுடன், தமிழர்களின் பண்பாடு, பாரம்பரியம், ஆன்மிகம் மற்றும் வரலாற்றுச் சிறப்புகளையும் எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது.குறிப்பாக, வெறுமனே பொம்மைகளை அடுக்கி வைக்கும் நிகழ்வாக அல்லாமல், புராண இதிகாசங்களையும் வரலாற்று நிகழ்வுகளையும் காட்சிகளின் ஊடாக அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்கும் முயற்சியாகவும் இந்தக் கொலு அமைந்துள்ளமை சிறப்பம்சமாகும்.மேலும், பாடசாலை மாணவர்களும் சிறுவர்களும் புத்தகங்களில் படித்தறியும் புராணக் கதைகளையும் வரலாற்று நிகழ்வுகளையும் நேரடியாகக் காட்சிகளாகப் பார்வையிட்டு அறிந்துகொள்ளும் வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்தப் பிரம்மாண்ட நவராத்திரி கொலுவை ஒன்பது நாட்களுக்குப் பொதுமக்கள் நேரில் சென்று பார்வையிட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், மாலை நேரங்களில் நடைபெறும் கும்ப பூஜைகளிலும் பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறான பிரம்மாண்டமான நவராத்திரி கொலு அமைப்பு அரிதாகக் காணப்படும் நிலையில், யாழ்ப்பாணம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் பக்தர்களும் இதனை நேரில் சென்று பார்வையிடுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.