• Oct 13 2026

திருகோணமலையில் சிறிய அளவிலான மீன்பிடித் தொழிலை மேம்படுத்த தேசிய செயல் திட்டம்

dorin / Oct 13th 2026, 1:59 pm
image

சிறிய அளவிலான மீன்பிடித் தொழிலுக்கான தேசிய செயல் திட்டத்தைத் தயாரிப்பதற்காக, மீனவ சமூகத்தினரைத் தெளிவுபடுத்தி அவர்களது கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் பெற்றுக்கொள்ளும் நிகழ்ச்சித்திட்டம் நேற்று (12) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திருகோணமலை மாவட்ட மீனவ சமூகத்தினரின் அனுபவங்கள், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் முன்மொழிவுகளைத் தேசிய செயல் திட்டத்தில் உள்ளடக்குவதே இந்நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

இதன்போது கருத்துத் தெரிவித்த திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்கள், மீன்பிடித் தொழிலானது திருகோணமலை மாவட்டத்தின் பொருளாதாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தொழில்துறையாக விளங்குவதாகக் குறிப்பிட்டார்.

மேலும், மீன்பிடித் தொழிலில் அடையாளம் காணப்பட்டுள்ள பிரச்சினைகளை ஆராய்ந்து, அவற்றுக்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முன்மொழிவுகளைத் தயாரிப்பதில் இவ்வாறான தகவல்களைச் சேகரிப்பது மிகவும் முக்கியமானது எனவும், மீனவ சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்த வேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இதன்போது, மீன்வளங்களை நீண்டகால அடிப்படையில் பாதுகாத்தல், கடலில் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், காப்புறுதி மற்றும் நலன்புரி வசதிகளை மேம்படுத்துதல், பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், மீன்களைச் சேமித்து வைப்பதற்கான வசதிகளை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்மொழிவுகள் தொடர்பான கருத்துகளும் தகவல்களும் திரட்டப்பட்டன.

இந்நிகழ்வில், மீன்பிடி அமைச்சின் தேசிய மீனவர் சம்மேளனத்தின் செயலாளர் அஜந்த குமார, மீன்பிடி மற்றும் நீர்வாழ் வளங்கள் திணைக்களத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் இந்திக உடுகொடகே மற்றும் திருகோணமலை மாவட்ட மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திருகோணமலையில் சிறிய அளவிலான மீன்பிடித் தொழிலை மேம்படுத்த தேசிய செயல் திட்டம் சிறிய அளவிலான மீன்பிடித் தொழிலுக்கான தேசிய செயல் திட்டத்தைத் தயாரிப்பதற்காக, மீனவ சமூகத்தினரைத் தெளிவுபடுத்தி அவர்களது கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் பெற்றுக்கொள்ளும் நிகழ்ச்சித்திட்டம் நேற்று (12) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.திருகோணமலை மாவட்ட மீனவ சமூகத்தினரின் அனுபவங்கள், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் முன்மொழிவுகளைத் தேசிய செயல் திட்டத்தில் உள்ளடக்குவதே இந்நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.இதன்போது கருத்துத் தெரிவித்த திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்கள், மீன்பிடித் தொழிலானது திருகோணமலை மாவட்டத்தின் பொருளாதாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தொழில்துறையாக விளங்குவதாகக் குறிப்பிட்டார்.மேலும், மீன்பிடித் தொழிலில் அடையாளம் காணப்பட்டுள்ள பிரச்சினைகளை ஆராய்ந்து, அவற்றுக்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முன்மொழிவுகளைத் தயாரிப்பதில் இவ்வாறான தகவல்களைச் சேகரிப்பது மிகவும் முக்கியமானது எனவும், மீனவ சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்த வேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.இதன்போது, மீன்வளங்களை நீண்டகால அடிப்படையில் பாதுகாத்தல், கடலில் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், காப்புறுதி மற்றும் நலன்புரி வசதிகளை மேம்படுத்துதல், பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், மீன்களைச் சேமித்து வைப்பதற்கான வசதிகளை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்மொழிவுகள் தொடர்பான கருத்துகளும் தகவல்களும் திரட்டப்பட்டன.இந்நிகழ்வில், மீன்பிடி அமைச்சின் தேசிய மீனவர் சம்மேளனத்தின் செயலாளர் அஜந்த குமார, மீன்பிடி மற்றும் நீர்வாழ் வளங்கள் திணைக்களத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் இந்திக உடுகொடகே மற்றும் திருகோணமலை மாவட்ட மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement