யாழ்ப்பாணம் மாநகரசபையின் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் ஜுலை மாதம் வரை இடம்பெற்ற பொதுக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட 264 சபைத் தீர்மானங்கள் தொடர்பான முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் கௌரவ முதல்வரின் பணிப்புரைக்கு அமைவாக மாநகர பிரதி முதல்வர் தலைமையில் (12) இடம்பெற்றது.
அந்த வகையில் மேற்படி காலவரையறைக்குள் எடுக்கப்பட்டுள்ள 264 சபைத் தீர்மானங்களில் 206 தீர்மானங்கள் அமுலாக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், இதுவரை நிறைவு செய்யப்படாமல், செயற்படுத்தலில் உள்ள 58 தீர்மானங்களின் தற்போதைய அமுலாக்க நிலமைகள் தொடர்பில் துறைசார் பதவி நிலை மற்றும் கிளைத் தலைவர்களினால் கௌரவ உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
மேற்படி கலந்துரையாடலில் கௌரவ உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர், பிரதம கணக்காளர், பிரதம பொறியியலாளர், செயலாளர், சுகாதார வைத்திய அதிகாரி, கிளைத் தலைவர்கள், பொறுப்பதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மாநகரசபையின் தீர்மானங்கள் தொடர்பான முன்னேற்ற கலந்தாய்வுக் கூட்டம் யாழ்ப்பாணம் மாநகரசபையின் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் ஜுலை மாதம் வரை இடம்பெற்ற பொதுக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட 264 சபைத் தீர்மானங்கள் தொடர்பான முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் கௌரவ முதல்வரின் பணிப்புரைக்கு அமைவாக மாநகர பிரதி முதல்வர் தலைமையில் (12) இடம்பெற்றது.அந்த வகையில் மேற்படி காலவரையறைக்குள் எடுக்கப்பட்டுள்ள 264 சபைத் தீர்மானங்களில் 206 தீர்மானங்கள் அமுலாக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், இதுவரை நிறைவு செய்யப்படாமல், செயற்படுத்தலில் உள்ள 58 தீர்மானங்களின் தற்போதைய அமுலாக்க நிலமைகள் தொடர்பில் துறைசார் பதவி நிலை மற்றும் கிளைத் தலைவர்களினால் கௌரவ உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.மேற்படி கலந்துரையாடலில் கௌரவ உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர், பிரதம கணக்காளர், பிரதம பொறியியலாளர், செயலாளர், சுகாதார வைத்திய அதிகாரி, கிளைத் தலைவர்கள், பொறுப்பதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.