• Oct 14 2026

ஞானசார தேரர் தவறிழைக்கவில்லை; பௌத்தர்களே ஓரணியில் திரளுங்கள்! - பகிரங்க அறைகூவல்

Chithra / Oct 11th 2026, 12:28 pm
image


பௌத்த மக்கள் அரசியல், குலம் மற்றும் சமூக ரீதியில் பிளவுபட்டு நிற்காமல், தமது அடையாளம், மரபுரிமைகள் மற்றும் பிக்குகளுக்கான உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்வதற்காக ஒன்றுபட வேண்டும் என்று நாரஹேன்பிட்ட அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் அறைகூவல் விடுத்துள்ளார்.


ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


"தவறிழைப்பவர்கள் சட்டத்தின் முன் தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 


ஆனால் அத்தகைய தண்டனையை எதிர்கொள்ளும் அளவுக்கு ஞானசார தேரர் தவறிழைக்கவில்லை என நான் நம்புகின்றேன்.


ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்றுவதற்கு முன்னர் மகாநாயக்க தேரர்களிடம் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். அவர்களின் வழிகாட்டலின்படி செயற்பட்டிருந்தால் இந்தப் பிரச்சினை உருவெடுத்திருக்காது.


துறவற ஆடை அகற்றப்பட்ட சம்பவத்தை உண்மையான பௌத்தர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த விவகாரத்தில் இடம்பெற்ற தவறை ஜனாதிபதி சீர்செய்தால் பௌத்த மக்கள் மத்தியில் அவருக்குரிய நன்மதிப்பு அதிகரிக்கும்.


பௌத்த மக்கள் மத்தியில் நிலவும் பிளவுகளே அழிவுக்கான ஆரம்பமாக அமையும். ஆட்சியைப் பிடிப்பதற்கோ அல்லது கவிழ்ப்பதற்கோ அல்லாமல், பௌத்த சாசனத்தின் முக்கியத்துவத்தையும் மரபுரிமைகளையும் பாதுகாக்க அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்." - என்றார்.


ஞானசார தேரர் தவறிழைக்கவில்லை; பௌத்தர்களே ஓரணியில் திரளுங்கள் - பகிரங்க அறைகூவல் பௌத்த மக்கள் அரசியல், குலம் மற்றும் சமூக ரீதியில் பிளவுபட்டு நிற்காமல், தமது அடையாளம், மரபுரிமைகள் மற்றும் பிக்குகளுக்கான உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்வதற்காக ஒன்றுபட வேண்டும் என்று நாரஹேன்பிட்ட அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் அறைகூவல் விடுத்துள்ளார்.ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,"தவறிழைப்பவர்கள் சட்டத்தின் முன் தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அத்தகைய தண்டனையை எதிர்கொள்ளும் அளவுக்கு ஞானசார தேரர் தவறிழைக்கவில்லை என நான் நம்புகின்றேன்.ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்றுவதற்கு முன்னர் மகாநாயக்க தேரர்களிடம் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். அவர்களின் வழிகாட்டலின்படி செயற்பட்டிருந்தால் இந்தப் பிரச்சினை உருவெடுத்திருக்காது.துறவற ஆடை அகற்றப்பட்ட சம்பவத்தை உண்மையான பௌத்தர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த விவகாரத்தில் இடம்பெற்ற தவறை ஜனாதிபதி சீர்செய்தால் பௌத்த மக்கள் மத்தியில் அவருக்குரிய நன்மதிப்பு அதிகரிக்கும்.பௌத்த மக்கள் மத்தியில் நிலவும் பிளவுகளே அழிவுக்கான ஆரம்பமாக அமையும். ஆட்சியைப் பிடிப்பதற்கோ அல்லது கவிழ்ப்பதற்கோ அல்லாமல், பௌத்த சாசனத்தின் முக்கியத்துவத்தையும் மரபுரிமைகளையும் பாதுகாக்க அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement