நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5,747 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 8 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையின்படி,
நாட்டின் 166 பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 1,594 குடும்பங்களைச் சேர்ந்த 5,747 பேர் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மழை உள்ளிட்ட காலநிலை அனர்த்தங்களால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதுடன்,ஒருவர் காணாமல் போயுள்ளார்.
மேலும் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன்,சீரற்ற காலநிலை காரணமாக 4 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன்,
953 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் கடும் மழையுடன் கூடிய காலநிலை நிலவி வரும் நிலையில்,
மறுபுறம் பல மாவட்டங்களில் வறட்சியின் தாக்கம் தொடர்ந்தும் நீடித்து வருகின்றது.
அதன்படி,12 மாவட்டங்களிலுள்ள 32 பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 47,583 குடும்பங்களைச் சேர்ந்த 156,756 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 32 பிரதேச செயலகப் பிரிவுகளில்,28 பிரிவுகளுக்கு குடிநீர் விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதுவரை 38,547 குடும்பங்களைச் சேர்ந்த 128,977 பேருக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது,நாட்டின் ஒரு பகுதியில் அதிக மழையால் மக்கள் பாதிக்கப்படும் அதே நேரத்தில்,
மற்றொரு பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீருக்காக சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் இயற்கையின் இரட்டைத் தாக்கம் – 8 பேர் பலி; ஆயிரக்கணக்கான மக்கள் தவிப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5,747 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 8 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையின்படி,நாட்டின் 166 பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 1,594 குடும்பங்களைச் சேர்ந்த 5,747 பேர் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மழை உள்ளிட்ட காலநிலை அனர்த்தங்களால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதுடன்,ஒருவர் காணாமல் போயுள்ளார்.மேலும் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன்,சீரற்ற காலநிலை காரணமாக 4 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன்,953 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.நாட்டின் சில பகுதிகளில் கடும் மழையுடன் கூடிய காலநிலை நிலவி வரும் நிலையில்,மறுபுறம் பல மாவட்டங்களில் வறட்சியின் தாக்கம் தொடர்ந்தும் நீடித்து வருகின்றது.அதன்படி,12 மாவட்டங்களிலுள்ள 32 பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 47,583 குடும்பங்களைச் சேர்ந்த 156,756 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 32 பிரதேச செயலகப் பிரிவுகளில்,28 பிரிவுகளுக்கு குடிநீர் விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இதுவரை 38,547 குடும்பங்களைச் சேர்ந்த 128,977 பேருக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது,நாட்டின் ஒரு பகுதியில் அதிக மழையால் மக்கள் பாதிக்கப்படும் அதே நேரத்தில்,மற்றொரு பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீருக்காக சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.