தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தென்னாப்பிரிக்கச் சட்ட நிபுணர் நவநீதம் “நாவி” பிள்ளைக்கு 2026ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நீதி, மனித உரிமைகள் மற்றும் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறச் செய்வதில் அவர் ஆற்றிய நீண்டகாலப் பணிகளுக்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் தமிழ் வம்சாவளிக் குடும்பத்தில் பிறந்த நாவி பிள்ளை, இனப் பாகுபாட்டுக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் பல தசாப்தங்களாகப் பணியாற்றியுள்ளார்.
நெல்சன் மண்டேலா உள்ளிட்ட இனவெறி எதிர்ப்புப் போராட்டக்காரர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பணியிலும் ஈடுபட்டார்.
ருவாண்டா சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் நீதிபதியாகவும் தலைவராகவும் பணியாற்றிய அவர், பின்னர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலும் நீதிபதியாகச் சேவையாற்றினார்.
2008 முதல் 2014 வரை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையராகவும் பொறுப்பு வகித்தார்.
போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை போன்ற கடுமையான குற்றங்களுக்கு எதிராகச் சர்வதேச அளவில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் அவரது பங்களிப்பை நோபல் குழு பாராட்டியுள்ளது.
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பெண் சர்வதேச அளவில் இத்தகைய உயரிய அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது பெருமைக்குரிய செய்தியாகும்.
தமிழ் வம்சாவளிப் பெண்ணுக்கு அமைதிக்கான நோபல் பரிசு தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தென்னாப்பிரிக்கச் சட்ட நிபுணர் நவநீதம் “நாவி” பிள்ளைக்கு 2026ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நீதி, மனித உரிமைகள் மற்றும் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறச் செய்வதில் அவர் ஆற்றிய நீண்டகாலப் பணிகளுக்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் தமிழ் வம்சாவளிக் குடும்பத்தில் பிறந்த நாவி பிள்ளை, இனப் பாகுபாட்டுக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் பல தசாப்தங்களாகப் பணியாற்றியுள்ளார். நெல்சன் மண்டேலா உள்ளிட்ட இனவெறி எதிர்ப்புப் போராட்டக்காரர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பணியிலும் ஈடுபட்டார். ருவாண்டா சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் நீதிபதியாகவும் தலைவராகவும் பணியாற்றிய அவர், பின்னர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலும் நீதிபதியாகச் சேவையாற்றினார். 2008 முதல் 2014 வரை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையராகவும் பொறுப்பு வகித்தார்.போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை போன்ற கடுமையான குற்றங்களுக்கு எதிராகச் சர்வதேச அளவில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் அவரது பங்களிப்பை நோபல் குழு பாராட்டியுள்ளது. தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பெண் சர்வதேச அளவில் இத்தகைய உயரிய அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது பெருமைக்குரிய செய்தியாகும்.