• Oct 13 2026

'இறந்தாலும் பலாலியில்தான் இறப்போம்'; மயங்கி விழுந்த தாய்! - பெரும் பதற்றம்

Chithra / Oct 11th 2026, 5:20 pm
image


“இறந்தாலும் பலாலியில்தான் இறப்போம்” என்ற உறுதியான நிலைப்பாட்டுடன், தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி பலாலி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்று (11) 17ஆவது வாரமாகவும் பலாலிச் சந்தியில் இடம்பெற்றது.


நீண்டகாலமாகத் தமது சொந்த நிலங்களிலிருந்து வெளியேறி வாழும் மக்கள், தமது பூர்வீகக் காணிகளை மீளப் பெற்றுக்கொண்டு சொந்த மண்ணில் மீண்டும் குடியேறுவதற்கான உரிமையை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.


கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாது போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், தமது நிலங்களை மீட்டெடுக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என உறுதிபடத் தெரிவித்தனர்.


இதன்போது, “இறந்தாலும் பலாலியில்தான் இறப்போம்” என மக்கள் உணர்வுபூர்வமாகத் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர்.


இந்நிலையில், இன்று இடம்பெற்ற போராட்டத்தின்போது கடுமையான வெயிலுக்கு மத்தியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருவர் திடீரென மயக்கமுற்று கீழே விழுந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


எனினும், கடுமையான வெப்பம் மற்றும் உடல் உபாதைகளுக்கு மத்தியிலும் தமது காணிகளை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.


பல ஆண்டுகளாகத் தமது பூர்வீக நிலங்களுக்குத் திரும்ப முடியாத நிலையில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கும் பலாலி மக்கள், தமது காணிகளை விடுவிப்பதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.


சொந்த மண்ணில் மீண்டும் குடியேற வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் 17 வாரங்களாகத் தொடர்ந்து போராடிவரும் பலாலி மக்களின் கோரிக்கைக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.

'இறந்தாலும் பலாலியில்தான் இறப்போம்'; மயங்கி விழுந்த தாய் - பெரும் பதற்றம் “இறந்தாலும் பலாலியில்தான் இறப்போம்” என்ற உறுதியான நிலைப்பாட்டுடன், தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி பலாலி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்று (11) 17ஆவது வாரமாகவும் பலாலிச் சந்தியில் இடம்பெற்றது.நீண்டகாலமாகத் தமது சொந்த நிலங்களிலிருந்து வெளியேறி வாழும் மக்கள், தமது பூர்வீகக் காணிகளை மீளப் பெற்றுக்கொண்டு சொந்த மண்ணில் மீண்டும் குடியேறுவதற்கான உரிமையை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாது போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், தமது நிலங்களை மீட்டெடுக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என உறுதிபடத் தெரிவித்தனர்.இதன்போது, “இறந்தாலும் பலாலியில்தான் இறப்போம்” என மக்கள் உணர்வுபூர்வமாகத் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர்.இந்நிலையில், இன்று இடம்பெற்ற போராட்டத்தின்போது கடுமையான வெயிலுக்கு மத்தியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருவர் திடீரென மயக்கமுற்று கீழே விழுந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.எனினும், கடுமையான வெப்பம் மற்றும் உடல் உபாதைகளுக்கு மத்தியிலும் தமது காணிகளை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.பல ஆண்டுகளாகத் தமது பூர்வீக நிலங்களுக்குத் திரும்ப முடியாத நிலையில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கும் பலாலி மக்கள், தமது காணிகளை விடுவிப்பதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.சொந்த மண்ணில் மீண்டும் குடியேற வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் 17 வாரங்களாகத் தொடர்ந்து போராடிவரும் பலாலி மக்களின் கோரிக்கைக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement