• Oct 09 2026

இரத்தம் வடிந்தபடி வந்த நோயாளி! உயிரைப் பாதுகாப்பதில் அலட்சியமா? மாஞ்சோலை வைத்தியசாலை மீது முறைப்பாடு

Chithra / Oct 9th 2026, 4:04 pm
image


முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் வைத்தியர் மற்றும் ஊழியர்களின் செயற்பாடுகளில் அசமந்த போக்கு காணப்படுவதாகக் குற்றஞ்சாட்டி, அது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஞானதாஸ் யூட்சன் வைத்தியசாலைப் பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


தனது சகோதரருக்கு ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்குச் சென்றபோது நேரடியாக எதிர்கொண்ட சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் இடம்பெறாத வகையில் மக்களின் உயிர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி, இன்று  அவர் கடிதம் ஒன்றைக் கையளித்துள்ளார்.


குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


2026.10.08 அன்று பிற்பகல் 1.40 மணியளவில், முள்ளியவளை நீராவிப்பிட்டியில் வசிக்கும் தனது சகோதரரான ஞானதாஸ் யூட்நிசான் தச்சுப் பட்டறையில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது இயந்திரத்தால் கையில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. 


இதனையடுத்து, இரத்தம் வடிந்துகொண்டிருந்த நிலையில் அவர் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.


அங்கு வெளிநோயாளர் பிரிவில் கடமையிலிருந்த சந்திரமோகன் என்ற வைத்தியரை அணுகி சிகிச்சை வழங்குமாறு கேட்டபோது, பிற்பகல் 2 மணிக்குப் பின்னரே நோயாளியைப் பார்வையிட முடியும் எனத் தெரிவித்ததாகக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


பிற்பகல் 1.40 மணி முதல் 1.55 மணி வரை குறித்த வைத்தியர் அங்கு இருந்தபோதிலும், காயமடைந்த தனது சகோதரரைப் பார்வையிட மறுத்ததாகவும், பின்னர் பிற்பகல் 2.05 மணியளவில் பிரியா என்ற வைத்தியரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு சிகிச்சை பெற்றுக்கொடுக்கப்பட்டதையடுத்து, தனது சகோதரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதனைத் தொடர்ந்து, தான் நேரடியாக வெளிநோயாளர் பிரிவுக்குச் சென்று, அங்கு கடமையிலிருந்த சந்திரமதி என்ற ஊழியரிடம் முன்னர் கடமையிலிருந்த வைத்தியரின் பெயரைக் கேட்டபோது, பெயரைக் கூற முடியாது என்றும், வேறு இடத்தில் சென்று விசாரிக்குமாறும் கடுமையான தொனியில் பதிலளித்ததாகவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


இவ்வாறான சில வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களின் செயற்பாடுகள் காரணமாக, அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஏனைய வைத்தியர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் வைத்தியசாலைக்கும் அவப்பெயர் ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


எனவே, சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வகையில் உரிய நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுத்து மக்களின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


வைத்தியசாலையின் நிர்வாகச் சீரின்மையால் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றனவா அல்லது தலைமைத்துவம் மற்றும் ஊழியர்களைக் கட்டுப்படுத்துவதில் குறைபாடுகள் உள்ளனவா என்பது தொடர்பில் வைத்தியசாலைப் பணிப்பாளர் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.


மேலும், மக்களிடையே எழுந்துள்ள இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


குறித்த கடிதத்தின் பிரதிகள் வடக்கு மாகாண ஆளுநர், மாகாண சுகாதாரப் பணிப்பாளர், பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர், நோயாளர் நலன்புரிச் சங்கம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், செல்வம் அடைக்கலநாதன், திலகநாதன் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


இரத்தம் வடிந்தபடி வந்த நோயாளி உயிரைப் பாதுகாப்பதில் அலட்சியமா மாஞ்சோலை வைத்தியசாலை மீது முறைப்பாடு முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் வைத்தியர் மற்றும் ஊழியர்களின் செயற்பாடுகளில் அசமந்த போக்கு காணப்படுவதாகக் குற்றஞ்சாட்டி, அது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஞானதாஸ் யூட்சன் வைத்தியசாலைப் பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.தனது சகோதரருக்கு ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்குச் சென்றபோது நேரடியாக எதிர்கொண்ட சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் இடம்பெறாத வகையில் மக்களின் உயிர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி, இன்று  அவர் கடிதம் ஒன்றைக் கையளித்துள்ளார்.குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,2026.10.08 அன்று பிற்பகல் 1.40 மணியளவில், முள்ளியவளை நீராவிப்பிட்டியில் வசிக்கும் தனது சகோதரரான ஞானதாஸ் யூட்நிசான் தச்சுப் பட்டறையில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது இயந்திரத்தால் கையில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இரத்தம் வடிந்துகொண்டிருந்த நிலையில் அவர் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.அங்கு வெளிநோயாளர் பிரிவில் கடமையிலிருந்த சந்திரமோகன் என்ற வைத்தியரை அணுகி சிகிச்சை வழங்குமாறு கேட்டபோது, பிற்பகல் 2 மணிக்குப் பின்னரே நோயாளியைப் பார்வையிட முடியும் எனத் தெரிவித்ததாகக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.பிற்பகல் 1.40 மணி முதல் 1.55 மணி வரை குறித்த வைத்தியர் அங்கு இருந்தபோதிலும், காயமடைந்த தனது சகோதரரைப் பார்வையிட மறுத்ததாகவும், பின்னர் பிற்பகல் 2.05 மணியளவில் பிரியா என்ற வைத்தியரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு சிகிச்சை பெற்றுக்கொடுக்கப்பட்டதையடுத்து, தனது சகோதரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து, தான் நேரடியாக வெளிநோயாளர் பிரிவுக்குச் சென்று, அங்கு கடமையிலிருந்த சந்திரமதி என்ற ஊழியரிடம் முன்னர் கடமையிலிருந்த வைத்தியரின் பெயரைக் கேட்டபோது, பெயரைக் கூற முடியாது என்றும், வேறு இடத்தில் சென்று விசாரிக்குமாறும் கடுமையான தொனியில் பதிலளித்ததாகவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இவ்வாறான சில வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களின் செயற்பாடுகள் காரணமாக, அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஏனைய வைத்தியர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் வைத்தியசாலைக்கும் அவப்பெயர் ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.எனவே, சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வகையில் உரிய நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுத்து மக்களின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.வைத்தியசாலையின் நிர்வாகச் சீரின்மையால் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றனவா அல்லது தலைமைத்துவம் மற்றும் ஊழியர்களைக் கட்டுப்படுத்துவதில் குறைபாடுகள் உள்ளனவா என்பது தொடர்பில் வைத்தியசாலைப் பணிப்பாளர் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.மேலும், மக்களிடையே எழுந்துள்ள இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.குறித்த கடிதத்தின் பிரதிகள் வடக்கு மாகாண ஆளுநர், மாகாண சுகாதாரப் பணிப்பாளர், பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர், நோயாளர் நலன்புரிச் சங்கம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், செல்வம் அடைக்கலநாதன், திலகநாதன் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement