• Oct 12 2026

மெட்ரோ பஸ்ஸுடன் மோதிய தனியார் பஸ்! பரிசோதனையில் கண்டறியப்பட்டது என்ன?

Bus
Chithra / Oct 9th 2026, 2:38 pm
image


அத்துருகிரிய நகரில் மெட்ரோ (Metro) பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளான தனியார் பஸ்ஸுக்கு தற்காலிக வீதிப் போக்குவரத்துத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


நேற்று (8) இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பாக, அத்துருகிரிய பொலிஸார் மோட்டார் வாகனப் பரிசோதகர் ஊடாக குறித்த தனியார் பஸ்ஸைப் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.


இதன்போது, பஸ் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டதையடுத்து, அதற்குத் தற்காலிக போக்குவரத்துத் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


அத்துருகிரிய – புறக்கோட்டை வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் குறித்த தனியார் பஸ், அத்துருகிரிய பஸ் நிலையத்தில் நிறுத்துவதற்காகப் பிரதான வீதியைக் கடந்து பின்னோக்கி நகர்த்தப்பட்டபோது, மில்லேனியம் சிட்டி – புறக்கோட்டை வீதியில் பயணித்த மெட்ரோ பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


இந்த விபத்து தொடர்பான சிசிடிவி (CCTV) காணொளிப் பதிவுகளைப் பொலிஸார் பெற்றுள்ளதுடன், அவை தொடர்பான தகவல்களை இன்று (9) கடுவலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


மேலும், விபத்தில் தொடர்புடைய இரு பஸ்களின் சாரதிகளும் போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதன்போது, இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தியிருக்கவில்லை என்பது பரிசோதனை அறிக்கைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மெட்ரோ பஸ்ஸுடன் மோதிய தனியார் பஸ் பரிசோதனையில் கண்டறியப்பட்டது என்ன அத்துருகிரிய நகரில் மெட்ரோ (Metro) பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளான தனியார் பஸ்ஸுக்கு தற்காலிக வீதிப் போக்குவரத்துத் தடை விதிக்கப்பட்டுள்ளது.நேற்று (8) இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பாக, அத்துருகிரிய பொலிஸார் மோட்டார் வாகனப் பரிசோதகர் ஊடாக குறித்த தனியார் பஸ்ஸைப் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.இதன்போது, பஸ் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டதையடுத்து, அதற்குத் தற்காலிக போக்குவரத்துத் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அத்துருகிரிய – புறக்கோட்டை வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் குறித்த தனியார் பஸ், அத்துருகிரிய பஸ் நிலையத்தில் நிறுத்துவதற்காகப் பிரதான வீதியைக் கடந்து பின்னோக்கி நகர்த்தப்பட்டபோது, மில்லேனியம் சிட்டி – புறக்கோட்டை வீதியில் பயணித்த மெட்ரோ பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்து தொடர்பான சிசிடிவி (CCTV) காணொளிப் பதிவுகளைப் பொலிஸார் பெற்றுள்ளதுடன், அவை தொடர்பான தகவல்களை இன்று (9) கடுவலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.மேலும், விபத்தில் தொடர்புடைய இரு பஸ்களின் சாரதிகளும் போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதன்போது, இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தியிருக்கவில்லை என்பது பரிசோதனை அறிக்கைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement