• Oct 09 2026

ஐந்து மாவட்டங்களில் புதிய உந்துருளி பதிவுகள் ஆரம்பம்

Aathira / Oct 9th 2026, 8:28 am
image

இலங்கையின் ஐந்து மாவட்டங்களில் புதிய உந்துருளிகளைப் பதிவு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் 19ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் துஷார இந்துனில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதற்கான ஆரம்பகட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட பின்னர், யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம், குருநாகல் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களிலுள்ள மோட்டார் போக்குவரத்து அலுவலகங்களில் புதிய உந்துருளிகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதற்கட்டமாக உந்துருளிகளைப் பதிவு செய்வதற்கு மாத்திரமே இந்தப் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஏனைய அனைத்து மோட்டார் வாகனங்களின் பதிவுகளையும் இதே நடைமுறையின் கீழ் மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐந்து மாவட்டங்களில் புதிய உந்துருளி பதிவுகள் ஆரம்பம் இலங்கையின் ஐந்து மாவட்டங்களில் புதிய உந்துருளிகளைப் பதிவு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் 19ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் துஷார இந்துனில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.இதற்கான ஆரம்பகட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட பின்னர், யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம், குருநாகல் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களிலுள்ள மோட்டார் போக்குவரத்து அலுவலகங்களில் புதிய உந்துருளிகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.முதற்கட்டமாக உந்துருளிகளைப் பதிவு செய்வதற்கு மாத்திரமே இந்தப் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.இதனைத் தொடர்ந்து, ஏனைய அனைத்து மோட்டார் வாகனங்களின் பதிவுகளையும் இதே நடைமுறையின் கீழ் மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement