• Oct 09 2026

பெருந்தோட்ட மக்களுக்கு சொந்த முகவரி வழங்கும் திட்டம் முன்னெடுப்பு

Aathira / Oct 9th 2026, 8:18 am
image

இலங்கையில் சுமார் 200 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் பெருந்தோட்ட மக்களுக்கு சொந்த முகவரியை வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பிரிடோ நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மைக்கல் ஜோக்கிம் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி வழங்கும் திட்டம் தொடர்பாக நேற்று  கொட்டகலையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நீண்டகாலமாகச் சொந்த முகவரி இல்லாத காரணத்தினால், பெருந்தோட்ட மக்கள் நாட்டில் தங்களுக்குரிய உரிமைகளைப் பெற்றுக்கொள்வதில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிலையை மாற்றி, பெருந்தோட்ட மக்களுக்கும் உரிய முகவரியைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், தற்போது தெரிவுசெய்யப்பட்ட 10 தோட்டங்களில் முகவரி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இத்திட்டம் வெற்றியளிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகத் தெரிவித்த அவர், எதிர்காலத்தில் மேலும் பல தோட்டங்களுக்கு இத்திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பிரிடோ நிறுவனத்தின் உதவி நிறைவேற்றுப் பணிப்பாளர் எம். கருணாகரன் மற்றும் கண்காணிப்பு, மீளாய்வு உத்தியோகத்தர் எம். சரனியா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பெருந்தோட்ட மக்களுக்கு சொந்த முகவரி வழங்கும் திட்டம் முன்னெடுப்பு இலங்கையில் சுமார் 200 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் பெருந்தோட்ட மக்களுக்கு சொந்த முகவரியை வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பிரிடோ நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மைக்கல் ஜோக்கிம் தெரிவித்துள்ளார்.பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி வழங்கும் திட்டம் தொடர்பாக நேற்று  கொட்டகலையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.நீண்டகாலமாகச் சொந்த முகவரி இல்லாத காரணத்தினால், பெருந்தோட்ட மக்கள் நாட்டில் தங்களுக்குரிய உரிமைகளைப் பெற்றுக்கொள்வதில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.இந்த நிலையை மாற்றி, பெருந்தோட்ட மக்களுக்கும் உரிய முகவரியைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், தற்போது தெரிவுசெய்யப்பட்ட 10 தோட்டங்களில் முகவரி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.இத்திட்டம் வெற்றியளிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகத் தெரிவித்த அவர், எதிர்காலத்தில் மேலும் பல தோட்டங்களுக்கு இத்திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பிரிடோ நிறுவனத்தின் உதவி நிறைவேற்றுப் பணிப்பாளர் எம். கருணாகரன் மற்றும் கண்காணிப்பு, மீளாய்வு உத்தியோகத்தர் எம். சரனியா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement