யாழ்ப்பாணம் - வலிகாமம் மேற்கு சங்கானை பகுதியில் புதிதாக மதுபானசாலை திறப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்பாக பொதுமக்களின் மாபெரும் எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ். மாவட்டத்தில் நான்கு புதிய மதுபானசாலைகள் திறக்கப்படவுள்ளதாக வெளியான தகவல்களையும், நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதையும் எதிர்த்து இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
வலி மேற்கு பகுதி பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டு புதிய மதுபானசாலை அனுமதியை ரத்து செய்யக் கோரி இதன்போது கண்டனம் தெரிவித்தனர்.
புதிதாக அமைக்கப்படுகின்ற மதுபான நிலையங்களால் சமூகத்தில் பிரச்சனைகள், குடும்பங்களில் வன்முறைகள் போன்றன ஏற்படுவதுடன் மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படும் என இந்த போராட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும் சங்கானைப் பகுதியில் மதுபான சாலை அமைக்கப்பட உள்ள இடத்திற்கு அண்மையில் பாடசாலை, பிரதேச செயலகம், சந்தைகள், கடைத்தொகுதிகள் என்பன உள்ளதாக தெரிவித்து, மதுபானசாலையால் அவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அத்துடன் வலி மேற்கு பகுதியில் இதுவரை மூன்று மதுபான நிலையங்கள் உள்ளதாகவும் கூறப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்னர் பேரணியாக பிரதேச செயலகம் வரை சென்று பிரதேச செயலரிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.
இந்த போராட்டத்தில் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ச.ஜெயந்தன், பிரதேச சபையின் உறுப்பினர்கள், வட பிரதேச நல்லொழுக்க சமூகத்தினர், வலிகாமம் மேற்கு பகுதி மக்கள், சமூக மட்ட அமைப்புகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பாடசாலைக்கு அருகில் மதுபானசாலையா யாழில் மக்கள் கொந்தளிப்பு யாழ்ப்பாணம் - வலிகாமம் மேற்கு சங்கானை பகுதியில் புதிதாக மதுபானசாலை திறப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்பாக பொதுமக்களின் மாபெரும் எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.யாழ். மாவட்டத்தில் நான்கு புதிய மதுபானசாலைகள் திறக்கப்படவுள்ளதாக வெளியான தகவல்களையும், நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதையும் எதிர்த்து இந்த போராட்டம் நடத்தப்பட்டது.வலி மேற்கு பகுதி பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டு புதிய மதுபானசாலை அனுமதியை ரத்து செய்யக் கோரி இதன்போது கண்டனம் தெரிவித்தனர்.புதிதாக அமைக்கப்படுகின்ற மதுபான நிலையங்களால் சமூகத்தில் பிரச்சனைகள், குடும்பங்களில் வன்முறைகள் போன்றன ஏற்படுவதுடன் மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படும் என இந்த போராட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.மேலும் சங்கானைப் பகுதியில் மதுபான சாலை அமைக்கப்பட உள்ள இடத்திற்கு அண்மையில் பாடசாலை, பிரதேச செயலகம், சந்தைகள், கடைத்தொகுதிகள் என்பன உள்ளதாக தெரிவித்து, மதுபானசாலையால் அவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அத்துடன் வலி மேற்கு பகுதியில் இதுவரை மூன்று மதுபான நிலையங்கள் உள்ளதாகவும் கூறப்பட்டது.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்னர் பேரணியாக பிரதேச செயலகம் வரை சென்று பிரதேச செயலரிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர். இந்த போராட்டத்தில் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ச.ஜெயந்தன், பிரதேச சபையின் உறுப்பினர்கள், வட பிரதேச நல்லொழுக்க சமூகத்தினர், வலிகாமம் மேற்கு பகுதி மக்கள், சமூக மட்ட அமைப்புகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.