• Oct 09 2026

மதுபானசாலைகள் வேண்டாம்.. பிரதேச செயலரை மாற்று! வலி.வடக்கில் பரபரப்பு

Chithra / Oct 8th 2026, 11:10 am
image


மதுபானசாலைகளற்ற பிரதேசமாக காணப்படும் வலி வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி ஒன்று இன்று (8) முன்னெடுக்கப்பட்டது.


எதிர்காலத்தை சிதைக்கும் செயற்பாட்டுக்கு அனுமதி கொடுத்த பிரதேச செயலரை உடனடியாக இடமாற்று என்ற வலுவான கோரிகையுடன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


தெல்லிப்பழைச் சந்தியில் காலை 9 மணியளவில் ஆரம்பமான குறித்த எதிர்ப்புப் போராட்ட பேரணி, தெல்லிப்பழை பிரதேச செயலகத்தை சென்றடைந்தது.


மதுபானசாலை அனுமதியை மறுபரிசீலனை செய்யக் கோரும் தமது நியாயக் கோரிக்கைகள் அடங்கிய மகஜர், பிரதேச செயலரிடம் கையளிக்கப்பட்டது.


வலி வடக்கின் சமூகச் சூழல் மற்றும் மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு மதுபானசாலை அனுமதி வழங்கும் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்


போராட்டத்தில் சமூக ஆர்வலர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, மதுபானசாலை அனுமதிக்கு எதிரான தமது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

மதுபானசாலைகள் வேண்டாம். பிரதேச செயலரை மாற்று வலி.வடக்கில் பரபரப்பு மதுபானசாலைகளற்ற பிரதேசமாக காணப்படும் வலி வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி ஒன்று இன்று (8) முன்னெடுக்கப்பட்டது.எதிர்காலத்தை சிதைக்கும் செயற்பாட்டுக்கு அனுமதி கொடுத்த பிரதேச செயலரை உடனடியாக இடமாற்று என்ற வலுவான கோரிகையுடன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.தெல்லிப்பழைச் சந்தியில் காலை 9 மணியளவில் ஆரம்பமான குறித்த எதிர்ப்புப் போராட்ட பேரணி, தெல்லிப்பழை பிரதேச செயலகத்தை சென்றடைந்தது.மதுபானசாலை அனுமதியை மறுபரிசீலனை செய்யக் கோரும் தமது நியாயக் கோரிக்கைகள் அடங்கிய மகஜர், பிரதேச செயலரிடம் கையளிக்கப்பட்டது.வலி வடக்கின் சமூகச் சூழல் மற்றும் மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு மதுபானசாலை அனுமதி வழங்கும் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்போராட்டத்தில் சமூக ஆர்வலர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, மதுபானசாலை அனுமதிக்கு எதிரான தமது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

Advertisement

Advertisement

Advertisement