பெருந்தோட்டப் பகுதிகளில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
அமைச்சர் சமந்த வித்யாரத்ன மற்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோரின் பங்கேற்புடன், கடந்த 6ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சுடன் தொடர்புடைய அரச அதிகாரிகள் மற்றும் அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பெருந்தோட்டப் பகுதிகளில் மக்கள் எதிர்நோக்கும் அவசரப் பிரச்சினைகள் தொடர்பில் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
குறிப்பாக, நாளாந்தம் தொழிலாளர்கள் பறிக்க வேண்டிய தேயிலை கொழுந்தின் அளவை அதிகரிப்பது தொடர்பான பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், தோட்டப் பகுதிகளில் காணப்படும் ஆபத்தான மரங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகள் மற்றும் மலசலக்கூட வசதிகளை மேம்படுத்துவதற்கு தேவையான காணி மற்றும் நில ஒதுக்கீடுகளில் காணப்படும் தடைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
மேலும், தோட்டத் தொழிலாளர்கள் மீதான அத்துமீறிய தாக்குதல்கள் மற்றும் முறையற்ற நடத்தை சம்பவங்கள் தொடர்பிலும் கூட்டத்தில் கடுமையான கவலை தெரிவிக்கப்பட்டது.
இதன்போது, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலைச்செல்வி, லவர்ஸ்லீப் தோட்டத்தில் தோட்ட அதிகாரி ஒருவர் தொழிலாளர்களை இழிவான வார்த்தைகளால் மிரட்டியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலும் சபையின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.
இத்தகைய செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், குறித்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இதற்கு மேலதிகமாக, தேயிலை, சிறு தேயிலைத் தோட்டங்கள், தென்னை, கித்துல் மற்றும் பனை உள்ளிட்ட முக்கிய பயிர்ச்செய்கைகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய கைத்தொழில்களில் காணப்படும் நடைமுறைப் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டது.
பெருந்தோட்டப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து பாராளுமன்ற ஆலோசனைக் குழுவில் தீவிர கவனம் பெருந்தோட்டப் பகுதிகளில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.அமைச்சர் சமந்த வித்யாரத்ன மற்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோரின் பங்கேற்புடன், கடந்த 6ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சுடன் தொடர்புடைய அரச அதிகாரிகள் மற்றும் அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.கூட்டத்தில் பெருந்தோட்டப் பகுதிகளில் மக்கள் எதிர்நோக்கும் அவசரப் பிரச்சினைகள் தொடர்பில் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.குறிப்பாக, நாளாந்தம் தொழிலாளர்கள் பறிக்க வேண்டிய தேயிலை கொழுந்தின் அளவை அதிகரிப்பது தொடர்பான பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.அத்துடன், தோட்டப் பகுதிகளில் காணப்படும் ஆபத்தான மரங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகள் மற்றும் மலசலக்கூட வசதிகளை மேம்படுத்துவதற்கு தேவையான காணி மற்றும் நில ஒதுக்கீடுகளில் காணப்படும் தடைகள் குறித்தும் ஆராயப்பட்டது.மேலும், தோட்டத் தொழிலாளர்கள் மீதான அத்துமீறிய தாக்குதல்கள் மற்றும் முறையற்ற நடத்தை சம்பவங்கள் தொடர்பிலும் கூட்டத்தில் கடுமையான கவலை தெரிவிக்கப்பட்டது.இதன்போது, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலைச்செல்வி, லவர்ஸ்லீப் தோட்டத்தில் தோட்ட அதிகாரி ஒருவர் தொழிலாளர்களை இழிவான வார்த்தைகளால் மிரட்டியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலும் சபையின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.இத்தகைய செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், குறித்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.இதற்கு மேலதிகமாக, தேயிலை, சிறு தேயிலைத் தோட்டங்கள், தென்னை, கித்துல் மற்றும் பனை உள்ளிட்ட முக்கிய பயிர்ச்செய்கைகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய கைத்தொழில்களில் காணப்படும் நடைமுறைப் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டது.