தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சி கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துருகிரிய பொலிஸாரால் இன்று காலை (8) அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றிரவு அத்துருகிரிய, பனாகொட பகுதியில் வாகன விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
50 வயதுடைய பாராளுமன்ற உறுப்பினர் தனது மோட்டார் காரைச் செலுத்திச் சென்றுகொண்டிருந்தபோது, வீதியைக் குறுக்கறுத்த பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.
விபத்தில் படுகாயமடைந்த வெல்லவாய, ஹூவாமவெல, திவெல்கந்துர பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய நபர் ஒருவர், மேலதிக சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தை ஏற்படுத்தி பாதசாரிக்குக் காயங்களை விளைவித்தமை தொடர்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பாராளுமன்ற உறுப்பினர் கடுவலை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி எம்.பி. கைது அத்துருகிரியவில் நடந்தது என்ன தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சி கைது செய்யப்பட்டுள்ளார்.அத்துருகிரிய பொலிஸாரால் இன்று காலை (8) அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நேற்றிரவு அத்துருகிரிய, பனாகொட பகுதியில் வாகன விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.50 வயதுடைய பாராளுமன்ற உறுப்பினர் தனது மோட்டார் காரைச் செலுத்திச் சென்றுகொண்டிருந்தபோது, வீதியைக் குறுக்கறுத்த பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.விபத்தில் படுகாயமடைந்த வெல்லவாய, ஹூவாமவெல, திவெல்கந்துர பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய நபர் ஒருவர், மேலதிக சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.விபத்தை ஏற்படுத்தி பாதசாரிக்குக் காயங்களை விளைவித்தமை தொடர்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த பாராளுமன்ற உறுப்பினர் கடுவலை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.