• Oct 09 2026

சிறையில் விசேட பாதுகாப்பில் ஷிரந்தி ராஜபக்ஷ! - உடல்நிலை குறித்து வெளியான புதிய தகவல்

Chithra / Oct 8th 2026, 10:53 am
image


முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், வெலிக்கடை மெகசின் சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் பாதுகாப்பான பகுதியில் அவரை தடுத்து வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சேனக்க பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.


அரசுக்குச் சொந்தமான வங்கியொன்றில் பெறப்பட்ட 10 மில்லியன் ரூபா பணத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட சிரந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (07) உத்தரவிட்டது.


இதன்போது, சிரந்தி ராஜபக்ஷவுக்கு பிணை கோரி நீதிமன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் டி சில்வா, அவருக்கு 73 வயதாகும் நிலையில், பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் இருப்பதாகத் தெரிவித்தார்.


குறிப்பாக, 2019ஆம் ஆண்டு முதல் இதய நோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், திடீரென தலைச்சுற்றல் ஏற்பட்டு மயங்கி விழும் நிலை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


இவ்வாறான இதய நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை சிறையில் அடைத்தால், அவர் மன அழுத்தத்தினால் உயிரிழக்கக் கூடும். ஏனெனில், அவருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயமும் உள்ளது.


மேலும், 2021ஆம் ஆண்டு மூளை தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், முதுகெலும்பு தொடர்பான பிரச்சினை மற்றும் வேரிகோஸ் நோய் நிலைமையும் இருப்பதாகவும் சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.


இதனால், அவரால் தனது அன்றாட செயற்பாடுகளை தனியாக மேற்கொள்ள முடியாது எனவும், சிறைச்சாலையில் அவரது உடல்நிலைக்குத் தேவையான சிகிச்சையை வழங்குவது சிரமமாக இருக்கும் எனவும் சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.


இதனையடுத்து, மருத்துவச் சிகிச்சைக்காக சிரந்தி ராஜபக்ஷவை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் உத்தரவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.


நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அவருக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சேனக்க பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.


இதேவேளை, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரை தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.


சிறையில் விசேட பாதுகாப்பில் ஷிரந்தி ராஜபக்ஷ - உடல்நிலை குறித்து வெளியான புதிய தகவல் முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், வெலிக்கடை மெகசின் சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் பாதுகாப்பான பகுதியில் அவரை தடுத்து வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சேனக்க பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.அரசுக்குச் சொந்தமான வங்கியொன்றில் பெறப்பட்ட 10 மில்லியன் ரூபா பணத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட சிரந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (07) உத்தரவிட்டது.இதன்போது, சிரந்தி ராஜபக்ஷவுக்கு பிணை கோரி நீதிமன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் டி சில்வா, அவருக்கு 73 வயதாகும் நிலையில், பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் இருப்பதாகத் தெரிவித்தார்.குறிப்பாக, 2019ஆம் ஆண்டு முதல் இதய நோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், திடீரென தலைச்சுற்றல் ஏற்பட்டு மயங்கி விழும் நிலை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.இவ்வாறான இதய நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை சிறையில் அடைத்தால், அவர் மன அழுத்தத்தினால் உயிரிழக்கக் கூடும். ஏனெனில், அவருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயமும் உள்ளது.மேலும், 2021ஆம் ஆண்டு மூளை தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், முதுகெலும்பு தொடர்பான பிரச்சினை மற்றும் வேரிகோஸ் நோய் நிலைமையும் இருப்பதாகவும் சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.இதனால், அவரால் தனது அன்றாட செயற்பாடுகளை தனியாக மேற்கொள்ள முடியாது எனவும், சிறைச்சாலையில் அவரது உடல்நிலைக்குத் தேவையான சிகிச்சையை வழங்குவது சிரமமாக இருக்கும் எனவும் சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.இதனையடுத்து, மருத்துவச் சிகிச்சைக்காக சிரந்தி ராஜபக்ஷவை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் உத்தரவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அவருக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சேனக்க பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.இதேவேளை, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரை தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement