• Oct 11 2026

மனைவி ஷிரந்தியை பார்க்க சிறைக்கு ஓடிய மஹிந்த! கண் சிகிச்சை தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு

Chithra / Oct 8th 2026, 3:48 pm
image


விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மனைவி ஷிரந்தி ராஜபக்சவை பார்வையிடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று (08) வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளார். 


நீதிமன்ற உத்தரவின் பேரில் ஷிரந்தி ராஜபக்ச வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில், ஷிரந்தியை பார்வையிடுவதற்காக மஹிந்த ராஜபக்ச இன்று சிறைச்சாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனிடையே, ஷிரந்தி ராஜபக்சவை இன்று கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கை இடம்பெறாது என சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.


சிறைச்சாலை மருத்துவரின் பரிந்துரைக்கு அமைய, அவர் நாளை (09) கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


இன்று ஷிரந்தி ராஜபக்ச சிறைச்சாலை வைத்தியசாலையின் விசேட மருத்துவரிடம் முன்னிலைப்படுத்தப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் நாளை தேசிய கண் வைத்தியசாலையின் விசேட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதற்காக அழைத்துச் செல்லப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஷிரந்தி ராஜபக்ச நேற்று கைது செய்யப்பட்டதன் பின்னர், அவரது கண்ணைச் சுற்றி பெரிய பிளாஸ்டர் காணப்பட்டமை தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் வெளியாகியிருந்தன.

மனைவி ஷிரந்தியை பார்க்க சிறைக்கு ஓடிய மஹிந்த கண் சிகிச்சை தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மனைவி ஷிரந்தி ராஜபக்சவை பார்வையிடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று (08) வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளார். நீதிமன்ற உத்தரவின் பேரில் ஷிரந்தி ராஜபக்ச வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில், ஷிரந்தியை பார்வையிடுவதற்காக மஹிந்த ராஜபக்ச இன்று சிறைச்சாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, ஷிரந்தி ராஜபக்சவை இன்று கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கை இடம்பெறாது என சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.சிறைச்சாலை மருத்துவரின் பரிந்துரைக்கு அமைய, அவர் நாளை (09) கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.இன்று ஷிரந்தி ராஜபக்ச சிறைச்சாலை வைத்தியசாலையின் விசேட மருத்துவரிடம் முன்னிலைப்படுத்தப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் நாளை தேசிய கண் வைத்தியசாலையின் விசேட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதற்காக அழைத்துச் செல்லப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஷிரந்தி ராஜபக்ச நேற்று கைது செய்யப்பட்டதன் பின்னர், அவரது கண்ணைச் சுற்றி பெரிய பிளாஸ்டர் காணப்பட்டமை தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் வெளியாகியிருந்தன.

Advertisement

Advertisement

Advertisement