• May 25 2026

அமெரிக்க எப்.பி.ஐ. புலனாய்வுத்துறை இலங்கையிலா? தூதரகத்தின் விளக்கம்

Chithra / May 24th 2026, 11:37 am
image

இலங்கையில் இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கு ஆதரவளிக்க அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவின் (FBI) குழுவொன்று  இலங்கைக்கு வந்துள்ளதாக வெளியாகியிருந்த தகவல்கள் தவறானவை என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.


இலங்கைத் திறைசேரி நிதியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்யப்பட்ட சைபர் மோசடி விவகாரம் தொடர்பில், விசாரணைக்காக, அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவின் (FBI) குழுவொன்று இலங்கைக்கு வந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்களில் வெளியான செய்திகளையே கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் முற்றிலுமாக மறுத்துள்ளது.


இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அத்தகைய எந்தவொரு FBI விசாரணைக் குழுவும் இலங்கைக்கு அனுப்பப்படவில்லை எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.


பல நாடுகளில் நடைமுறையில் உள்ள ஒத்துழைப்பு முறைகளைப் போலவே, இலங்கையிலும் அமெரிக்க தூதரகத்தின் கீழ் FBI Legal Attaché அதிகாரி ஒருவர் பணியாற்றி வருவதாகவும், அவர் தேவையான சந்தர்ப்பங்களில் இலங்கை சட்ட அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து செயற்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், விசாரணைகள் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் துல்லியமான தகவல்களை வெளியிடுவது மிகவும் முக்கியமானது என்றும், தவறான தகவல்கள் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அமெரிக்க தூதரகம் வலியுறுத்தியுள்ளது.


அமெரிக்க எப்.பி.ஐ. புலனாய்வுத்துறை இலங்கையிலா தூதரகத்தின் விளக்கம் இலங்கையில் இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கு ஆதரவளிக்க அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவின் (FBI) குழுவொன்று  இலங்கைக்கு வந்துள்ளதாக வெளியாகியிருந்த தகவல்கள் தவறானவை என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.இலங்கைத் திறைசேரி நிதியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்யப்பட்ட சைபர் மோசடி விவகாரம் தொடர்பில், விசாரணைக்காக, அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவின் (FBI) குழுவொன்று இலங்கைக்கு வந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்களில் வெளியான செய்திகளையே கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் முற்றிலுமாக மறுத்துள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அத்தகைய எந்தவொரு FBI விசாரணைக் குழுவும் இலங்கைக்கு அனுப்பப்படவில்லை எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.பல நாடுகளில் நடைமுறையில் உள்ள ஒத்துழைப்பு முறைகளைப் போலவே, இலங்கையிலும் அமெரிக்க தூதரகத்தின் கீழ் FBI Legal Attaché அதிகாரி ஒருவர் பணியாற்றி வருவதாகவும், அவர் தேவையான சந்தர்ப்பங்களில் இலங்கை சட்ட அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து செயற்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், விசாரணைகள் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் துல்லியமான தகவல்களை வெளியிடுவது மிகவும் முக்கியமானது என்றும், தவறான தகவல்கள் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அமெரிக்க தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement