மன்னார் மாவட்டத்தில் இம்முறை 31,339 ஏக்கர் நிலப்பரப்பில் பெரும்போக நெல் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் நேற்று (7) புதன்கிழமை மாலை உயிலங்குளத்தில், மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
மன்னார் மாவட்டத்தின் முக்கிய நீர்த்தேக்கங்களில் ஒன்றான கட்டுக்கரைக் குளத்தின் கீழ் பெரும்போக நெல் பயிர்ச்செய்கையை மேற்கொள்வது தொடர்பில் இதன்போது ஆலோசிக்கப்பட்டதுடன், பல்வேறு தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.
இதன்படி, கட்டுக்கரைக் குளத்தின் கீழான பெரும்போக நெல் பயிர்ச்செய்கைக்கான முதல் நீர் விநியோகம் எதிர்வரும் 23 அன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
நான்கு மாத கால நெல் வகைகளைப் பயிரிடும் விவசாயிகள் புழுதி விதைப்பை 15ஆம் திகதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, மூன்று அல்லது மூன்றரை மாத கால நெல் வகைகளைப் பயிரிடுவோர் மற்றும் இரண்டரை மாத கால நெல் வகைகளைப் பயிரிடுவோர் 12.11.2026க்கு முன்னர் விதைப்பை நிறைவு செய்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதிக்குப் பின்னர் நெல் விதைப்பை மேற்கொள்ளும் விவசாயிகள், எதிர்காலத்தில் ஏற்படும் அனர்த்தங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கான நிவாரணங்களைப் பெறுவதற்கு தகுதியற்றவர்களாகக் கருதப்படுவர் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அனுமதிக்கப்பட்ட நிலப்பரப்பைத் தவிர்த்து மேலதிக இடங்களில் சட்டவிரோதமாக பயிர்ச்செய்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இவ்வாறான சட்டவிரோத பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட 18 விவசாயிகளுக்கு எதிராக ஏற்கனவே நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
எனவே, விவசாயிகள் நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் பயிர்ச்செய்கையை மேற்கொண்டு, உரிய ஒத்துழைப்பை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலக்கெடுவுக்கு பின்னர் விதைத்தால் நிவாரணம் இல்லை மன்னார் விவசாயிகளுக்கு எச்சரிக்கை மன்னார் மாவட்டத்தில் இம்முறை 31,339 ஏக்கர் நிலப்பரப்பில் பெரும்போக நெல் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.மன்னார் மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் நேற்று (7) புதன்கிழமை மாலை உயிலங்குளத்தில், மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.மன்னார் மாவட்டத்தின் முக்கிய நீர்த்தேக்கங்களில் ஒன்றான கட்டுக்கரைக் குளத்தின் கீழ் பெரும்போக நெல் பயிர்ச்செய்கையை மேற்கொள்வது தொடர்பில் இதன்போது ஆலோசிக்கப்பட்டதுடன், பல்வேறு தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.இதன்படி, கட்டுக்கரைக் குளத்தின் கீழான பெரும்போக நெல் பயிர்ச்செய்கைக்கான முதல் நீர் விநியோகம் எதிர்வரும் 23 அன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.நான்கு மாத கால நெல் வகைகளைப் பயிரிடும் விவசாயிகள் புழுதி விதைப்பை 15ஆம் திகதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதேவேளை, மூன்று அல்லது மூன்றரை மாத கால நெல் வகைகளைப் பயிரிடுவோர் மற்றும் இரண்டரை மாத கால நெல் வகைகளைப் பயிரிடுவோர் 12.11.2026க்கு முன்னர் விதைப்பை நிறைவு செய்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதிக்குப் பின்னர் நெல் விதைப்பை மேற்கொள்ளும் விவசாயிகள், எதிர்காலத்தில் ஏற்படும் அனர்த்தங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கான நிவாரணங்களைப் பெறுவதற்கு தகுதியற்றவர்களாகக் கருதப்படுவர் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.மேலும், அனுமதிக்கப்பட்ட நிலப்பரப்பைத் தவிர்த்து மேலதிக இடங்களில் சட்டவிரோதமாக பயிர்ச்செய்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.இவ்வாறான சட்டவிரோத பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட 18 விவசாயிகளுக்கு எதிராக ஏற்கனவே நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.எனவே, விவசாயிகள் நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் பயிர்ச்செய்கையை மேற்கொண்டு, உரிய ஒத்துழைப்பை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.