• Oct 11 2026

மாயமான மதுபான போத்தல்கள்! விற்பனை நிலையத்தில் இரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Chithra / Oct 8th 2026, 2:44 pm
image


நுவரெலியா – பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெம்பியன் நகரில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இச் சம்பவம் நேற்று (07) இரவு இடம்பெற்றுள்ளது. 


மதுபான விற்பனை நிலையத்தின் முன்பக்க கதவில் பொருத்தப்பட்டிருந்த பூட்டை உடைத்த கொள்ளையர்கள், கதவைத் திறந்து விற்பனை நிலையத்திற்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதன்போது, விற்பனை நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு வகையான மதுபான போத்தல்கள் மற்றும் பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.


சம்பவம் தொடர்பில் மதுபான விற்பனை நிலையத்தின் உரிமையாளர் பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.


முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், கொள்ளையர்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


மேலும், கொள்ளையிடப்பட்ட மதுபான போத்தல்கள் மற்றும் பணத்தின் பெறுமதி தொடர்பிலும் பொலிஸார் தகவல்களை சேகரித்து வருகின்றனர்.


இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மாயமான மதுபான போத்தல்கள் விற்பனை நிலையத்தில் இரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் நுவரெலியா – பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெம்பியன் நகரில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச் சம்பவம் நேற்று (07) இரவு இடம்பெற்றுள்ளது. மதுபான விற்பனை நிலையத்தின் முன்பக்க கதவில் பொருத்தப்பட்டிருந்த பூட்டை உடைத்த கொள்ளையர்கள், கதவைத் திறந்து விற்பனை நிலையத்திற்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன்போது, விற்பனை நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு வகையான மதுபான போத்தல்கள் மற்றும் பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.சம்பவம் தொடர்பில் மதுபான விற்பனை நிலையத்தின் உரிமையாளர் பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், கொள்ளையர்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.மேலும், கொள்ளையிடப்பட்ட மதுபான போத்தல்கள் மற்றும் பணத்தின் பெறுமதி தொடர்பிலும் பொலிஸார் தகவல்களை சேகரித்து வருகின்றனர்.இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement