• Oct 09 2026

இறக்குமதி பெயரில் பெரும் பணப் பரிமாற்றம்? விசாரணையில் அதிர்ச்சி தகவல்! சிக்கிய இளைஞன்

Chithra / Oct 8th 2026, 12:53 pm
image


பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, தொலைநகல் பணப் பரிமாற்றம் (Telegraphic Transfer) மூலம் சுமார் 25 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில்   ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கொழும்பு - வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


2024 ஜனவரி முதல் 2025 ஜூலை வரையான காலப்பகுதியில், இலங்கையில் பதிவு செய்யப்பட்ட 6 போலி நிறுவனங்களின் ஊடாக இந்தப் பணம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


வணிக வங்கிகள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட தொலைநகல் பணப் பரிமாற்றங்களின் மூலம் சுமார் 7.5 பில்லியன் ரூபாய் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், எனினும் அந்தப் பணத்திற்கான பொருட்கள் எவையும் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்தப் பணப் பரிமாற்றம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.


இறக்குமதி பெயரில் பெரும் பணப் பரிமாற்றம் விசாரணையில் அதிர்ச்சி தகவல் சிக்கிய இளைஞன் பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, தொலைநகல் பணப் பரிமாற்றம் (Telegraphic Transfer) மூலம் சுமார் 25 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில்   ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கொழும்பு - வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.2024 ஜனவரி முதல் 2025 ஜூலை வரையான காலப்பகுதியில், இலங்கையில் பதிவு செய்யப்பட்ட 6 போலி நிறுவனங்களின் ஊடாக இந்தப் பணம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.வணிக வங்கிகள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட தொலைநகல் பணப் பரிமாற்றங்களின் மூலம் சுமார் 7.5 பில்லியன் ரூபாய் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், எனினும் அந்தப் பணத்திற்கான பொருட்கள் எவையும் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்தப் பணப் பரிமாற்றம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement