இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு குறிப்பிடத்தக்க பற்றாக்குறை நிலவுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மனநல விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் சதுரி சுரவீர தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பயிற்சி பெற்ற மனநல வைத்தியர்களுக்கு அவுஸ்திரேலியா மற்றும் ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட நாடுகளில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் காணப்படுவதாகவும், இதன் காரணமாக வைத்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது நாட்டில் மனநல வைத்தியர்களின் பற்றாக்குறைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இலங்கையில் சுமார் 100 முதல் 120 வரையான விசேட மனநல வைத்தியர்கள் மாத்திரமே உள்ளதாகவும், நாட்டில் சிகிச்சை பெற வரும் நோயாளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவானது என்றும் பேராசிரியர் சதுரி சுரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் தேசிய மனநல நிறுவனத்தின் கிளினிக்குகளில் ஒரு காலை நேர கிளினிக்கிற்கு மாத்திரம் சுமார் 150 நோயாளர்கள் வருகை தருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை எந்தவொரு வயதினருக்கும் மனநலப் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என தெரிவித்த அவர், மனநலப் பிரச்சினைகளை அலட்சியப்படுத்தாமல் உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்வது அவசியம் என வலியுறுத்தினார்.
மனநலப் பாதிப்பு ஏற்பட்டுள்ள ஒருவர் தனது எண்ணங்களிலும் நடத்தையிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தானாகவே உணர முடியாத நிலை காணப்படலாம் எனவும், அதனை சுற்றியுள்ளவர்கள் அவதானித்து உரிய மருத்துவ உதவியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், மனநலப் பிரச்சினை காரணமாக ஒருவரின் இயல்பான செயற்பாடுகள் மற்றும் நடத்தையில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் எனவும், உரிய சிகிச்சை வழங்கப்பட்ட பின்னர் அவர் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும் எனவும் பேராசிரியர் சதுரி சுரவீர தெரிவித்துள்ளார்.
எனவே, மனநலப் பிரச்சினைகளுக்கான அறிகுறிகள் காணப்படும் சந்தர்ப்பங்களில் தகுதியான வைத்தியர் அல்லது மனநல விசேட வைத்திய நிபுணரிடம் சிகிச்சை பெறுவது முக்கியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு பற்றாக்குறை – வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் முக்கிய காரணம் இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு குறிப்பிடத்தக்க பற்றாக்குறை நிலவுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மனநல விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் சதுரி சுரவீர தெரிவித்துள்ளார்.சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இலங்கையில் பயிற்சி பெற்ற மனநல வைத்தியர்களுக்கு அவுஸ்திரேலியா மற்றும் ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட நாடுகளில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் காணப்படுவதாகவும், இதன் காரணமாக வைத்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது நாட்டில் மனநல வைத்தியர்களின் பற்றாக்குறைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போது இலங்கையில் சுமார் 100 முதல் 120 வரையான விசேட மனநல வைத்தியர்கள் மாத்திரமே உள்ளதாகவும், நாட்டில் சிகிச்சை பெற வரும் நோயாளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவானது என்றும் பேராசிரியர் சதுரி சுரவீர தெரிவித்துள்ளார்.கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் தேசிய மனநல நிறுவனத்தின் கிளினிக்குகளில் ஒரு காலை நேர கிளினிக்கிற்கு மாத்திரம் சுமார் 150 நோயாளர்கள் வருகை தருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை, சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை எந்தவொரு வயதினருக்கும் மனநலப் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என தெரிவித்த அவர், மனநலப் பிரச்சினைகளை அலட்சியப்படுத்தாமல் உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்வது அவசியம் என வலியுறுத்தினார்.மனநலப் பாதிப்பு ஏற்பட்டுள்ள ஒருவர் தனது எண்ணங்களிலும் நடத்தையிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தானாகவே உணர முடியாத நிலை காணப்படலாம் எனவும், அதனை சுற்றியுள்ளவர்கள் அவதானித்து உரிய மருத்துவ உதவியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.மேலும், மனநலப் பிரச்சினை காரணமாக ஒருவரின் இயல்பான செயற்பாடுகள் மற்றும் நடத்தையில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் எனவும், உரிய சிகிச்சை வழங்கப்பட்ட பின்னர் அவர் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும் எனவும் பேராசிரியர் சதுரி சுரவீர தெரிவித்துள்ளார்.எனவே, மனநலப் பிரச்சினைகளுக்கான அறிகுறிகள் காணப்படும் சந்தர்ப்பங்களில் தகுதியான வைத்தியர் அல்லது மனநல விசேட வைத்திய நிபுணரிடம் சிகிச்சை பெறுவது முக்கியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.