• Oct 10 2026

கச்சத்தீவு முதல் கடல் வளங்கள் வரை: வடக்கு மீனவர்களுக்கு ஆறுதலளிக்கும் செய்தி; அமைச்சருடன் முக்கிய பேச்சு

Chithra / Oct 8th 2026, 1:18 pm
image


இலங்கை – இந்திய மீனவர் விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பேச்சுவார்த்தையில் இலங்கை மீனவர்களின் நிலைப்பாடு குறித்து கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம். ஆலம் தெரிவித்துள்ளார்.


மன்னாரில் அமைந்துள்ள அலுவலகத்தில் இன்று (08) வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


கடந்த திங்கட்கிழமை கடற்றொழில் அமைச்சரை சந்தித்து, இந்திய மீனவர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக சுமார் ஒன்றரை மணி நேரம் கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டார்.


இந்த சந்திப்பில் வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்துடன் இணைந்து செயற்படும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் தேசிய மீனவர் தொழிற்சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.


இதன்போது ஆறு முக்கிய விடயங்கள் தொடர்பாக அமைச்சருடன் கலந்துரையாடப்பட்டதாகவும், குறிப்பாக இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பேச்சுவார்த்தை குறித்து தமது நிலைப்பாடு தெளிவாக தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.


அமைச்சரின் விளக்கத்தின்படி, முதற்கட்டமாக அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அதன் பின்னர் இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலும், தொடர்ந்து அமைச்சு மற்றும் அரசு மட்டத்திலும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஆலம் தெரிவித்தார்.


அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தையில் கடல் வளங்கள், கடல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.


அதேவேளை, இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலான ஏனைய பிரச்சினைகள் மீனவர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்படுவதற்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்ததாக அவர் கூறினார்.


எவ்வாறாயினும், இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அமைச்சரிடம் தெளிவாக தெரிவித்ததாக ஆலம் குறிப்பிட்டார்.


இலங்கை கடல் வளங்களை பாதுகாப்பதில் வடக்கு மீனவர்கள் நீண்டகாலமாக பங்களிப்பு செய்து வருவதாகவும், கடல் சூழலை பாதுகாப்பதுடன் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளை தவிர்த்து தமது தொழிலை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதால் கடல் வளங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


மேலும், கச்சத்தீவு தொடர்பான விவகாரம் குறித்து அண்மையில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் இடம்பெற்ற விவாதங்களையும் அவர் வரவேற்றார்.


2008ஆம் ஆண்டு முதல் கச்சத்தீவு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளின் பின்னணியில் இடம்பெற்ற விசாரணைகளின்போது, கச்சத்தீவு இலங்கைக்குரியது என்ற நிலைப்பாட்டை இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளதாக தமக்கு தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.


இந்த விடயம் இலங்கை, குறிப்பாக வடக்கு மீனவர்களுக்கு ஆறுதலளிக்கும் செய்தியாக அமைந்துள்ளதாகவும் ஆலம் தெரிவித்தார்.


கடல் வளங்களை பாதுகாப்பதற்கும் கடல் சூழலை தூய்மையாக பேணுவதற்கும் இரு நாடுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

கச்சத்தீவு முதல் கடல் வளங்கள் வரை: வடக்கு மீனவர்களுக்கு ஆறுதலளிக்கும் செய்தி; அமைச்சருடன் முக்கிய பேச்சு இலங்கை – இந்திய மீனவர் விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பேச்சுவார்த்தையில் இலங்கை மீனவர்களின் நிலைப்பாடு குறித்து கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம். ஆலம் தெரிவித்துள்ளார்.மன்னாரில் அமைந்துள்ள அலுவலகத்தில் இன்று (08) வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,கடந்த திங்கட்கிழமை கடற்றொழில் அமைச்சரை சந்தித்து, இந்திய மீனவர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக சுமார் ஒன்றரை மணி நேரம் கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டார்.இந்த சந்திப்பில் வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்துடன் இணைந்து செயற்படும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் தேசிய மீனவர் தொழிற்சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.இதன்போது ஆறு முக்கிய விடயங்கள் தொடர்பாக அமைச்சருடன் கலந்துரையாடப்பட்டதாகவும், குறிப்பாக இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பேச்சுவார்த்தை குறித்து தமது நிலைப்பாடு தெளிவாக தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.அமைச்சரின் விளக்கத்தின்படி, முதற்கட்டமாக அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அதன் பின்னர் இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலும், தொடர்ந்து அமைச்சு மற்றும் அரசு மட்டத்திலும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஆலம் தெரிவித்தார்.அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தையில் கடல் வளங்கள், கடல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.அதேவேளை, இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலான ஏனைய பிரச்சினைகள் மீனவர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்படுவதற்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்ததாக அவர் கூறினார்.எவ்வாறாயினும், இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அமைச்சரிடம் தெளிவாக தெரிவித்ததாக ஆலம் குறிப்பிட்டார்.இலங்கை கடல் வளங்களை பாதுகாப்பதில் வடக்கு மீனவர்கள் நீண்டகாலமாக பங்களிப்பு செய்து வருவதாகவும், கடல் சூழலை பாதுகாப்பதுடன் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளை தவிர்த்து தமது தொழிலை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதால் கடல் வளங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.மேலும், கச்சத்தீவு தொடர்பான விவகாரம் குறித்து அண்மையில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் இடம்பெற்ற விவாதங்களையும் அவர் வரவேற்றார்.2008ஆம் ஆண்டு முதல் கச்சத்தீவு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளின் பின்னணியில் இடம்பெற்ற விசாரணைகளின்போது, கச்சத்தீவு இலங்கைக்குரியது என்ற நிலைப்பாட்டை இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளதாக தமக்கு தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.இந்த விடயம் இலங்கை, குறிப்பாக வடக்கு மீனவர்களுக்கு ஆறுதலளிக்கும் செய்தியாக அமைந்துள்ளதாகவும் ஆலம் தெரிவித்தார்.கடல் வளங்களை பாதுகாப்பதற்கும் கடல் சூழலை தூய்மையாக பேணுவதற்கும் இரு நாடுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement