• May 28 2026

அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு நாளை முதல் வங்கிக் கணக்கில்!

Chithra / May 28th 2026, 12:47 pm
image

 அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான மே மாத கொடுப்பனவுகள் நாளை (29) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.


அதன்படி, அஸ்வெசும முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்ற சுமார் 7 இலட்சம் முதியவர்களுக்காக 3,493,915,000.00 ரூபா நிதி அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டுள்ளது.


முதலாம் கட்டம் - 70 வயதுக்கு மேற்பட்ட 625,128 முதிய பயனாளிகளுக்காக 3,125,600,000.00 ரூபா


இரண்டாம் கட்டம் - 70 வயதுக்கு மேற்பட்ட 73,663 முதிய பயனாளிகளுக்காக 368,315,000.00 ரூபா


அனைத்து பயனாளிகளும் தமக்குரிய முதியோர் கொடுப்பனவை நாளை முதல் தமது அஸ்வெசும பயனாளிகள் வங்கிக் கணக்கின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என அந்தச் சபை மேலும் அறிவித்துள்ளது.

அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு நாளை முதல் வங்கிக் கணக்கில்  அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான மே மாத கொடுப்பனவுகள் நாளை (29) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.அதன்படி, அஸ்வெசும முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்ற சுமார் 7 இலட்சம் முதியவர்களுக்காக 3,493,915,000.00 ரூபா நிதி அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டுள்ளது.முதலாம் கட்டம் - 70 வயதுக்கு மேற்பட்ட 625,128 முதிய பயனாளிகளுக்காக 3,125,600,000.00 ரூபாஇரண்டாம் கட்டம் - 70 வயதுக்கு மேற்பட்ட 73,663 முதிய பயனாளிகளுக்காக 368,315,000.00 ரூபாஅனைத்து பயனாளிகளும் தமக்குரிய முதியோர் கொடுப்பனவை நாளை முதல் தமது அஸ்வெசும பயனாளிகள் வங்கிக் கணக்கின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என அந்தச் சபை மேலும் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement