• Oct 14 2026

தனியார் பஸ்களும் மெட்ரோ சேவையில் இணையுமா? புதிய மாற்றம்!

Chithra / Oct 9th 2026, 12:05 pm
image


தனியார் துறையினரும் மெட்ரோ பஸ் சேவையில் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்பு ஒரு வருடத்திற்குள் வழங்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர்   அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


மெட்ரோ பஸ்களுக்கு சேதம் விளைவிக்கும் சாரதிகள் மற்றும் உரிமையாளர்களுக்கு எதிராகப் பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தமை தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.


தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட மெட்ரோ பஸ்கள் சேவையில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், பெரும்பாலான தனியார் பஸ்கள் இந்தச் சேவைக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.


சில தனியார் பஸ்களே இவ்வாறான சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இதனை ஒட்டுமொத்தத் தனியார் பஸ் உரிமையாளர்களின் பிரச்சினையாகக் கருத முடியாது என்றும் கூறியுள்ளார்.


மேலும், நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் புதிய போக்குவரத்து முறைமைக்கு அமைவாகச் செயற்படுமாறும், அதற்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ளுமாறும் தனியார் பஸ் உரிமையாளர்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


“ஒரு வருடத்திற்குள் மெட்ரோ பஸ் சேவையைத் தனியார் துறைக்கும் திறந்துவிடுவோம்” என அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

தனியார் பஸ்களும் மெட்ரோ சேவையில் இணையுமா புதிய மாற்றம் தனியார் துறையினரும் மெட்ரோ பஸ் சேவையில் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்பு ஒரு வருடத்திற்குள் வழங்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர்   அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மெட்ரோ பஸ்களுக்கு சேதம் விளைவிக்கும் சாரதிகள் மற்றும் உரிமையாளர்களுக்கு எதிராகப் பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தமை தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட மெட்ரோ பஸ்கள் சேவையில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், பெரும்பாலான தனியார் பஸ்கள் இந்தச் சேவைக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.சில தனியார் பஸ்களே இவ்வாறான சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இதனை ஒட்டுமொத்தத் தனியார் பஸ் உரிமையாளர்களின் பிரச்சினையாகக் கருத முடியாது என்றும் கூறியுள்ளார்.மேலும், நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் புதிய போக்குவரத்து முறைமைக்கு அமைவாகச் செயற்படுமாறும், அதற்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ளுமாறும் தனியார் பஸ் உரிமையாளர்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.“ஒரு வருடத்திற்குள் மெட்ரோ பஸ் சேவையைத் தனியார் துறைக்கும் திறந்துவிடுவோம்” என அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement