2027 ஜனவரி மாதம் வரை நீர் கட்டணங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
தம்புத்தேகமவில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நீர் கட்டணத் திருத்தங்கள் ஆண்டுக்கு இருமுறை மதிப்பாய்வு செய்யப்படுவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அடுத்த கட்டண மதிப்பாய்வு 2027 ஜனவரி மாதத்தில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் முன்மொழியப்படும் எந்தவொரு நீர் கட்டண மாற்றமும் நீர் சுத்திகரிப்புச் செலவுகளில் ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த செலவு மாற்றங்கள் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள மதிப்பாய்வின்போது மதிப்பீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் சுசில் ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
நீர் கட்டணத்தில் மாற்றம் எப்போது அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2027 ஜனவரி மாதம் வரை நீர் கட்டணங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.தம்புத்தேகமவில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.நீர் கட்டணத் திருத்தங்கள் ஆண்டுக்கு இருமுறை மதிப்பாய்வு செய்யப்படுவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அடுத்த கட்டண மதிப்பாய்வு 2027 ஜனவரி மாதத்தில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும், எதிர்காலத்தில் முன்மொழியப்படும் எந்தவொரு நீர் கட்டண மாற்றமும் நீர் சுத்திகரிப்புச் செலவுகளில் ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.குறித்த செலவு மாற்றங்கள் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள மதிப்பாய்வின்போது மதிப்பீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் சுசில் ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.