ஹட்டன் நகருக்கு வாழைத்தார்களை ஏற்றிக்கொண்டு வந்த லொறியொன்றில் நாகப்பாம்பு காணப்பட்ட சம்பவம் இன்று (03) அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த லொறியில் ஏற்றப்பட்டிருந்த வாழைத்தார்களுக்கு இடையில் நாகப்பாம்பு இருப்பதை அவதானித்தவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதேவேளை, கடந்த சில நாட்களாக ஹட்டன் நகரின் பல்வேறு பகுதிகளில் பாம்புகள் நடமாடும் சம்பவங்கள் பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, மக்கள் அதிகளவில் நடமாடும் வர்த்தகப் பகுதிகளில் கட்டுவிரியன் மற்றும் நாகப்பாம்புகள் தென்படுவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, ஹட்டன் நகரில் பாம்புகள் நடமாட்டம் அதிகரிப்பதற்கான காரணங்களைக் கண்டறிந்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஹட்டனில் வாழைத்தார் ஏற்றி வந்த லொறியில் நாகப்பாம்பு – மக்கள் மத்தியில் அச்சம் ஹட்டன் நகருக்கு வாழைத்தார்களை ஏற்றிக்கொண்டு வந்த லொறியொன்றில் நாகப்பாம்பு காணப்பட்ட சம்பவம் இன்று (03) அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த லொறியில் ஏற்றப்பட்டிருந்த வாழைத்தார்களுக்கு இடையில் நாகப்பாம்பு இருப்பதை அவதானித்தவர்கள் அச்சமடைந்துள்ளனர்.இதேவேளை, கடந்த சில நாட்களாக ஹட்டன் நகரின் பல்வேறு பகுதிகளில் பாம்புகள் நடமாடும் சம்பவங்கள் பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.குறிப்பாக, மக்கள் அதிகளவில் நடமாடும் வர்த்தகப் பகுதிகளில் கட்டுவிரியன் மற்றும் நாகப்பாம்புகள் தென்படுவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.எனவே, ஹட்டன் நகரில் பாம்புகள் நடமாட்டம் அதிகரிப்பதற்கான காரணங்களைக் கண்டறிந்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.