ஆற்றில் மூழ்கி உயிருக்கு போராடிய சிறுமி, உதவி கோரி எழுப்பிய அலறல் சத்தத்தைக் கேட்டு ஆற்றில் குதித்த நபர் ஒருவர் துணிச்சலாக மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கண்டி, தெல்தெனிய – ஒருதொட்டையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் காணொளியில், ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த சிறுமியைக் காப்பாற்றுவதற்காக குறித்த நபர் ஆற்றில் குதிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், பாலத்திற்கு அருகிலுள்ள பேருந்து நிறுத்தம் ஒன்றில் நின்றுகொண்டிருந்தபோது, அலறும் சத்தம் கேட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சத்தம் கேட்ட திசையை நோக்கி விரைந்து சென்றபோது, சிறுமி ஒருவர் ஆற்றில் மூழ்கி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதைக் கண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, உடனடியாக தனது மேலாடையைக் கழற்றி, கையடக்கத் தொலைபேசி மற்றும் பணப்பையை ஓரமாக வைத்துவிட்டு சிறுமியைக் காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்துள்ளார்.
தனது நண்பர்களின் உதவியுடன் கயிற்றைப் பயன்படுத்தி சிறுமியைப் பாதுகாப்பாக கரைக்கு மீட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சிறுமி பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது நலமுடன் குணமடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாலத்திற்கு அருகில் கேட்ட சிறுமியின் அலறல் சத்தம். அடுத்த நொடியே இளைஞன் செய்த செயல் ஆற்றில் மூழ்கி உயிருக்கு போராடிய சிறுமி, உதவி கோரி எழுப்பிய அலறல் சத்தத்தைக் கேட்டு ஆற்றில் குதித்த நபர் ஒருவர் துணிச்சலாக மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கண்டி, தெல்தெனிய – ஒருதொட்டையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் காணொளியில், ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த சிறுமியைக் காப்பாற்றுவதற்காக குறித்த நபர் ஆற்றில் குதிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், பாலத்திற்கு அருகிலுள்ள பேருந்து நிறுத்தம் ஒன்றில் நின்றுகொண்டிருந்தபோது, அலறும் சத்தம் கேட்டதாகத் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து, சத்தம் கேட்ட திசையை நோக்கி விரைந்து சென்றபோது, சிறுமி ஒருவர் ஆற்றில் மூழ்கி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதைக் கண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.இதன்போது, உடனடியாக தனது மேலாடையைக் கழற்றி, கையடக்கத் தொலைபேசி மற்றும் பணப்பையை ஓரமாக வைத்துவிட்டு சிறுமியைக் காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்துள்ளார்.தனது நண்பர்களின் உதவியுடன் கயிற்றைப் பயன்படுத்தி சிறுமியைப் பாதுகாப்பாக கரைக்கு மீட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து, சிறுமி பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது நலமுடன் குணமடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.