• Nov 06 2026

யாழ். மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திற்கு புதிய நிர்வாகம் தெரிவு - செம்மணி போராட்டக் குறித்து விசேட கூட்டத்திற்கும் அழைப்பு!

Ziya / Nov 5th 2026, 5:30 pm
image

யாழ்ப்பாணம், நல்லூர் சிவகுரு ஆதீன மண்டபத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் செயலாளர் மற்றும் வவுனியா மாவட்ட தலைவி சிவானந்தன் ஜெயதா தலைமையில் யாழ். மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திற்கான புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது.


அதன்படி புதிய நிர்வாகப் பொறுப்புகளுக்கு பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


இதன்படி யாழ் மாவட்ட தலைவராக சிவபாதம் இளங்கோதையும், செயலாளராக கஜேந்திரகுமாரும், பொருளாளராக சத்திய விஜயபாமாவும், உப தலைவராக விக்னேஸ்வரியும் உப செயலாளராக சுதாவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


இந்தப் புதிய நிர்வாகமானது, யாழ். மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக இடம்பெறும் அனைத்துப் போராட்டங்களையும் இனி முழுமையாக முன்னெடுத்துச் செயற்படும் எனவும் தெரிவித்தனர்.


செம்மணி என்புக்கூடுகள் குறித்து நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையை முற்றாக நிராகரிப்பதோடு, சர்வதேச நீதியை வலியுறுத்தி எதிர்வரும் 16ஆம் திகதி பிற்பகல் 2:00 மணிக்கு செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக வகிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் அறிவித்துள்ளது.


குறித்த இப்பேராட்டம் குறித்து ஆராய்வதற்காகவும், அனைத்து உறவுகளையும் ஒருங்கிணைப்பதற்காகவும் எதிர்வரும் 7ஆம் திகதி சனிக்கிழமை காலை 11:00 மணிக்கு நல்லூர் சிவகுரு ஆதீன மண்டபத்தில் விசேட கூட்டம் ஒன்று கூடவுள்ளது.


எனவே, இக்கூட்டத்திலும் போராட்டத்திலும் அனைத்து சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள், தமிழ் அரசியல் கட்சிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பூரண ஆதரவை வழங்குமாறு அழைப்பு விடுத்தமை குறிபிடத்தக்கது.


யாழ். மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திற்கு புதிய நிர்வாகம் தெரிவு - செம்மணி போராட்டக் குறித்து விசேட கூட்டத்திற்கும் அழைப்பு யாழ்ப்பாணம், நல்லூர் சிவகுரு ஆதீன மண்டபத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் செயலாளர் மற்றும் வவுனியா மாவட்ட தலைவி சிவானந்தன் ஜெயதா தலைமையில் யாழ். மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திற்கான புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது.அதன்படி புதிய நிர்வாகப் பொறுப்புகளுக்கு பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.இதன்படி யாழ் மாவட்ட தலைவராக சிவபாதம் இளங்கோதையும், செயலாளராக கஜேந்திரகுமாரும், பொருளாளராக சத்திய விஜயபாமாவும், உப தலைவராக விக்னேஸ்வரியும் உப செயலாளராக சுதாவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.இந்தப் புதிய நிர்வாகமானது, யாழ். மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக இடம்பெறும் அனைத்துப் போராட்டங்களையும் இனி முழுமையாக முன்னெடுத்துச் செயற்படும் எனவும் தெரிவித்தனர்.செம்மணி என்புக்கூடுகள் குறித்து நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையை முற்றாக நிராகரிப்பதோடு, சர்வதேச நீதியை வலியுறுத்தி எதிர்வரும் 16ஆம் திகதி பிற்பகல் 2:00 மணிக்கு செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக வகிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் அறிவித்துள்ளது.குறித்த இப்பேராட்டம் குறித்து ஆராய்வதற்காகவும், அனைத்து உறவுகளையும் ஒருங்கிணைப்பதற்காகவும் எதிர்வரும் 7ஆம் திகதி சனிக்கிழமை காலை 11:00 மணிக்கு நல்லூர் சிவகுரு ஆதீன மண்டபத்தில் விசேட கூட்டம் ஒன்று கூடவுள்ளது.எனவே, இக்கூட்டத்திலும் போராட்டத்திலும் அனைத்து சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள், தமிழ் அரசியல் கட்சிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பூரண ஆதரவை வழங்குமாறு அழைப்பு விடுத்தமை குறிபிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement