யாழ்ப்பாணம் மாநகரசபையின் பிரதான கழிவு முகாமைத்துவ நிலையமான காக்கைதீவு மீள்சுழற்சி மையத்தை நவீனமயப்படுத்துவதற்காக சுமார் 320 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கடந்த காலங்களில் போதிய கட்டமைப்புகள் மற்றும் நவீன இயந்திரங்கள் இல்லாமையால், குறித்த மையத்தில் கழிவுகளைத் தரம்பிரித்தல், மீள்சுழற்சி செய்தல் உள்ளிட்ட செயற்பாடுகளில் பல்வேறு சிக்கல்கள் காணப்பட்டன. குறிப்பாக, உக்காத கழிவுகள் சேகரிக்கப்பட்ட பகுதிகளில் அடிக்கடி தீப்பரவல்கள் ஏற்படுவதுடன், சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளும் ஏற்பட்டுவந்தன.
கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் திகதி முதல்வர் வி. மதிவதனி தலைமையிலான புதிய சபை பொறுப்பேற்ற பின்னர், காக்கைதீவு மீள்சுழற்சி மையத்தை மேம்படுத்துவதற்கான திட்டமிடல்கள் முன்னெடுக்கப்பட்டன.
இதன் அடிப்படையில், மாநகரசபை உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் சுமார் 320 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்திப் பணிகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியின் மூலம் உள்ளக வீதிகள் மற்றும் பாதுகாப்புச் சுற்றுமதில்கள் அமைத்தல், கழிவுகளைத் தரம்பிரிக்கும் நவீன இயந்திரத் தொகுதிகளை நிறுவுதல், கழிவு முகாமைத்துவப் பொருள் மீட்பு மையத்தை உருவாக்குதல், கழிவுநீர் மற்றும் மலசலகூடக் கழிவுகளைச் சுத்திகரிக்கும் கட்டமைப்புகளை அமைத்தல், பாதுகாப்பு மின்விளக்குகள் மற்றும் கண்காணிப்புக் கமராக்களைப் பொருத்துதல், தீப்பரவல்களைக் கட்டுப்படுத்துவதற்கான நீர் இணைப்புகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மேலும், சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படாத வகையில் உரிய ஆய்வுகள் மற்றும் பொதுமக்களுடனான கலந்துரையாடல்களின் அடிப்படையில் உக்காத கழிவுகளை எரியூட்டுவதற்கான கட்டமைப்புகளையும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட திட்டங்களில் 90 சதவீதமானவற்றுக்குத் தற்போது கேள்விகோரல்கள் கோரப்பட்டுள்ளதுடன், சில பணிகள் உடனடியாக ஆரம்பிக்கத் தயாராக உள்ளன. இந்நிலையில், முதல்வர் வி. மதிவதனி தலைமையிலான குழுவினர் நவம்பர் 4ஆம் திகதி காக்கைதீவு மையத்திற்கு நேரில் சென்று அபிவிருத்திப் பணிகளுக்கான முன்னேற்பாடுகளைப் பார்வையிட்டனர்.
இந்த 320 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், கழிவு முகாமைத்துவப் பொருள் மீட்பு மையத்தை உருவாக்குவதற்காக வடக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தின் ஊடாக 85 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
காக்கைதீவு மீள்சுழற்சி நிலைய அபிவிருத்திக்கு 320 மில்லியன் நிதி ஒதுக்கீடு யாழ்ப்பாணம் மாநகரசபையின் பிரதான கழிவு முகாமைத்துவ நிலையமான காக்கைதீவு மீள்சுழற்சி மையத்தை நவீனமயப்படுத்துவதற்காக சுமார் 320 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.கடந்த காலங்களில் போதிய கட்டமைப்புகள் மற்றும் நவீன இயந்திரங்கள் இல்லாமையால், குறித்த மையத்தில் கழிவுகளைத் தரம்பிரித்தல், மீள்சுழற்சி செய்தல் உள்ளிட்ட செயற்பாடுகளில் பல்வேறு சிக்கல்கள் காணப்பட்டன. குறிப்பாக, உக்காத கழிவுகள் சேகரிக்கப்பட்ட பகுதிகளில் அடிக்கடி தீப்பரவல்கள் ஏற்படுவதுடன், சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளும் ஏற்பட்டுவந்தன.கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் திகதி முதல்வர் வி. மதிவதனி தலைமையிலான புதிய சபை பொறுப்பேற்ற பின்னர், காக்கைதீவு மீள்சுழற்சி மையத்தை மேம்படுத்துவதற்கான திட்டமிடல்கள் முன்னெடுக்கப்பட்டன. இதன் அடிப்படையில், மாநகரசபை உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் சுமார் 320 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்திப் பணிகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த நிதியின் மூலம் உள்ளக வீதிகள் மற்றும் பாதுகாப்புச் சுற்றுமதில்கள் அமைத்தல், கழிவுகளைத் தரம்பிரிக்கும் நவீன இயந்திரத் தொகுதிகளை நிறுவுதல், கழிவு முகாமைத்துவப் பொருள் மீட்பு மையத்தை உருவாக்குதல், கழிவுநீர் மற்றும் மலசலகூடக் கழிவுகளைச் சுத்திகரிக்கும் கட்டமைப்புகளை அமைத்தல், பாதுகாப்பு மின்விளக்குகள் மற்றும் கண்காணிப்புக் கமராக்களைப் பொருத்துதல், தீப்பரவல்களைக் கட்டுப்படுத்துவதற்கான நீர் இணைப்புகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.மேலும், சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படாத வகையில் உரிய ஆய்வுகள் மற்றும் பொதுமக்களுடனான கலந்துரையாடல்களின் அடிப்படையில் உக்காத கழிவுகளை எரியூட்டுவதற்கான கட்டமைப்புகளையும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.அனுமதிக்கப்பட்ட திட்டங்களில் 90 சதவீதமானவற்றுக்குத் தற்போது கேள்விகோரல்கள் கோரப்பட்டுள்ளதுடன், சில பணிகள் உடனடியாக ஆரம்பிக்கத் தயாராக உள்ளன. இந்நிலையில், முதல்வர் வி. மதிவதனி தலைமையிலான குழுவினர் நவம்பர் 4ஆம் திகதி காக்கைதீவு மையத்திற்கு நேரில் சென்று அபிவிருத்திப் பணிகளுக்கான முன்னேற்பாடுகளைப் பார்வையிட்டனர்.இந்த 320 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், கழிவு முகாமைத்துவப் பொருள் மீட்பு மையத்தை உருவாக்குவதற்காக வடக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தின் ஊடாக 85 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.