இலங்கை போக்குவரத்து சபையில் மொத்தம் 7,130 பேருந்துகள் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், அவற்றில் சுமார் 5,000 பேருந்துகள் மட்டுமே சேவையில் ஈடுபடுவதற்குப் பொருத்தமான நிலையில் உள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (05) நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது, இலங்கை போக்குவரத்து சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள 7,130 பேருந்துகளில் 6,987 சாதாரண பேருந்துகளும், 143 சொகுசுப் பேருந்துகளும் அடங்குவதாகப் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, மாகாண ரீதியில் இயங்கி வரும் தனியார் பேருந்துகள் தொடர்பான விபரங்களையும் அவர் சபையில் வெளியிட்டார்.
இதற்கமைய, மேல் மாகாணத்தில் 5,524 தனியார் பேருந்துகளும், மத்திய மாகாணத்தில் 2,433 பேருந்துகளும், தென் மாகாணத்தில் 1,326 பேருந்துகளும் சேவையில் ஈடுபட்டு வருகின்றன.
அத்துடன், வட மாகாணத்தில் 976 பேருந்துகளும், கிழக்கு மாகாணத்தில் 520 பேருந்துகளும், வடமேல் மாகாணத்தில் 1,324 பேருந்துகளும், வடமத்திய மாகாணத்தில் 509 பேருந்துகளும், ஊவா மாகாணத்தில் 1,043 பேருந்துகளும், சப்ரகமுவ மாகாணத்தில் 1,866 பேருந்துகளும் இயங்கி வருகின்றன.
இதனிடையே, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் கடந்த ஒக்டோபர் முதலாம் திகதி வரை 2,966 தனியார் பேருந்துகளுக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
அவற்றில் 1,826 சாதாரண சேவைப் பேருந்துகளுக்கும், 257 அரை சொகுசுப் பேருந்துகளுக்கும், 651 சொகுசுப் பேருந்துகளுக்கும், 232 அதி சொகுசுப் பேருந்துகளுக்கும் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
நாட்டின் பொதுப் போக்குவரத்துச் சேவையின் தற்போதைய நிலை தொடர்பான விபரங்களை வெளியிடும் வகையில் பிரதி அமைச்சர் இந்தத் தகவல்களைப் பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.
இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்துகள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல் பாராளுமன்றத்தில் வெளியான பட்டியல் இலங்கை போக்குவரத்து சபையில் மொத்தம் 7,130 பேருந்துகள் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், அவற்றில் சுமார் 5,000 பேருந்துகள் மட்டுமே சேவையில் ஈடுபடுவதற்குப் பொருத்தமான நிலையில் உள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் இன்று (05) நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.இதன்போது, இலங்கை போக்குவரத்து சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள 7,130 பேருந்துகளில் 6,987 சாதாரண பேருந்துகளும், 143 சொகுசுப் பேருந்துகளும் அடங்குவதாகப் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.இதேவேளை, மாகாண ரீதியில் இயங்கி வரும் தனியார் பேருந்துகள் தொடர்பான விபரங்களையும் அவர் சபையில் வெளியிட்டார்.இதற்கமைய, மேல் மாகாணத்தில் 5,524 தனியார் பேருந்துகளும், மத்திய மாகாணத்தில் 2,433 பேருந்துகளும், தென் மாகாணத்தில் 1,326 பேருந்துகளும் சேவையில் ஈடுபட்டு வருகின்றன.அத்துடன், வட மாகாணத்தில் 976 பேருந்துகளும், கிழக்கு மாகாணத்தில் 520 பேருந்துகளும், வடமேல் மாகாணத்தில் 1,324 பேருந்துகளும், வடமத்திய மாகாணத்தில் 509 பேருந்துகளும், ஊவா மாகாணத்தில் 1,043 பேருந்துகளும், சப்ரகமுவ மாகாணத்தில் 1,866 பேருந்துகளும் இயங்கி வருகின்றன.இதனிடையே, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் கடந்த ஒக்டோபர் முதலாம் திகதி வரை 2,966 தனியார் பேருந்துகளுக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.அவற்றில் 1,826 சாதாரண சேவைப் பேருந்துகளுக்கும், 257 அரை சொகுசுப் பேருந்துகளுக்கும், 651 சொகுசுப் பேருந்துகளுக்கும், 232 அதி சொகுசுப் பேருந்துகளுக்கும் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.நாட்டின் பொதுப் போக்குவரத்துச் சேவையின் தற்போதைய நிலை தொடர்பான விபரங்களை வெளியிடும் வகையில் பிரதி அமைச்சர் இந்தத் தகவல்களைப் பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.