யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியின் அராலிச் சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து இன்று (04.11.2026) காலை இடம்பெற்றுள்ளது.
ஊர்காவற்றுறை திசையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி அதிவேகமாகப் பயணித்த முச்சக்கரவண்டி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த தொலைத்தொடர்புக் கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று இளைஞர்களும் தூக்கி வீசப்பட்டு, படுகாயமடைந்த நிலையில் வீதியில் கிடந்துள்ளனர்.
இதனையடுத்து அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் விரைந்து செயற்பட்டு, தனியாருக்குச் சொந்தமான இரண்டு முச்சக்கரவண்டிகளின் உதவியுடன் காயமடைந்தவர்களை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.
இதேவேளை, விபத்து இடம்பெற்றதைத் தொடர்ந்து அவசர அம்புலன்ஸ் சேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், அம்புலன்ஸ் இறுதிவரை சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
படுகாயமடைந்தவர்களை பொதுமக்களே முச்சக்கரவண்டிகளில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டமை தொடர்பில் அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
யாழில் கோர விபத்து தூக்கி வீசப்பட்ட மூன்று இளைஞர்கள் கைகொடுக்காத அம்புலன்ஸ் சேவை யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியின் அராலிச் சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த விபத்து இன்று (04.11.2026) காலை இடம்பெற்றுள்ளது.ஊர்காவற்றுறை திசையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி அதிவேகமாகப் பயணித்த முச்சக்கரவண்டி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த தொலைத்தொடர்புக் கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று இளைஞர்களும் தூக்கி வீசப்பட்டு, படுகாயமடைந்த நிலையில் வீதியில் கிடந்துள்ளனர்.இதனையடுத்து அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் விரைந்து செயற்பட்டு, தனியாருக்குச் சொந்தமான இரண்டு முச்சக்கரவண்டிகளின் உதவியுடன் காயமடைந்தவர்களை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.இதேவேளை, விபத்து இடம்பெற்றதைத் தொடர்ந்து அவசர அம்புலன்ஸ் சேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், அம்புலன்ஸ் இறுதிவரை சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.படுகாயமடைந்தவர்களை பொதுமக்களே முச்சக்கரவண்டிகளில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டமை தொடர்பில் அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.