மோட்டார் வாகனமொன்றைக் கொள்வனவு செய்வதற்கும், அதற்கான குத்தகைக் கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்ட பணத்தின் மூலத்தைக் கண்டறிவதற்கான விசாரணைகளின் அடிப்படையில், பிரதம பொலிஸ் பரிசோதகர் (CIP) வருணி போகஹவத்த எதிர்வரும் வெள்ளிக்கிழமை (06) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் (CID) கைது செய்யப்பட்ட அவர், நேற்று (03) மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொட்டவில பொலிஸ் நிலையத்தின் நிர்வாகப் பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரியாகப் பணியாற்றிய வருணி போகஹவத்தவிடமிருந்து சொகுசு வாகனமொன்றையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் அண்மையில் கைப்பற்றியுள்ளனர்.
மாத்தறை கூட்டுறவுச் சங்கத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 100 கோடி ரூபாவுக்கும் அதிகமான நிதி மோசடியுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் நபரொருவரே குறித்த வாகனத்திற்கான மாதாந்த குத்தகைக் கொடுப்பனவுகளைச் செலுத்தி வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, குறித்த பொலிஸ் அதிகாரியின் மாதாந்த சம்பளம் 1 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவாக உள்ள நிலையில், அவர் பயன்படுத்திய சொகுசு வாகனத்திற்கான மாதாந்த குத்தகைக் கொடுப்பனவு மாத்திரம் 1 இலட்சத்து 32 ஆயிரம் ரூபாவாக இருந்துள்ளதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, குறித்த வாகனத்தைக் கொள்வனவு செய்வதற்கும் அதன் குத்தகைக் கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்ட நிதியின் மூலத்தைக் கண்டறிவது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ரூ.1.32 இலட்சம் குத்தகைக் கட்டணம் பொலிஸ் அதிகாரியின் சொகுசு வாகனத்தின் பின்னணி என்ன மோட்டார் வாகனமொன்றைக் கொள்வனவு செய்வதற்கும், அதற்கான குத்தகைக் கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்ட பணத்தின் மூலத்தைக் கண்டறிவதற்கான விசாரணைகளின் அடிப்படையில், பிரதம பொலிஸ் பரிசோதகர் (CIP) வருணி போகஹவத்த எதிர்வரும் வெள்ளிக்கிழமை (06) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் (CID) கைது செய்யப்பட்ட அவர், நேற்று (03) மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கொட்டவில பொலிஸ் நிலையத்தின் நிர்வாகப் பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரியாகப் பணியாற்றிய வருணி போகஹவத்தவிடமிருந்து சொகுசு வாகனமொன்றையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் அண்மையில் கைப்பற்றியுள்ளனர்.மாத்தறை கூட்டுறவுச் சங்கத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 100 கோடி ரூபாவுக்கும் அதிகமான நிதி மோசடியுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் நபரொருவரே குறித்த வாகனத்திற்கான மாதாந்த குத்தகைக் கொடுப்பனவுகளைச் செலுத்தி வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இதேவேளை, குறித்த பொலிஸ் அதிகாரியின் மாதாந்த சம்பளம் 1 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவாக உள்ள நிலையில், அவர் பயன்படுத்திய சொகுசு வாகனத்திற்கான மாதாந்த குத்தகைக் கொடுப்பனவு மாத்திரம் 1 இலட்சத்து 32 ஆயிரம் ரூபாவாக இருந்துள்ளதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து, குறித்த வாகனத்தைக் கொள்வனவு செய்வதற்கும் அதன் குத்தகைக் கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்ட நிதியின் மூலத்தைக் கண்டறிவது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.