மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளதால், இலங்கையிலும் எரிபொருள் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு எரிபொருள் இறக்குமதிக்காக அரசாங்கம் செலவிட வேண்டிய தொகை சுமார் 50 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிபொருள் விலை தொடர்பில் எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் சில யோசனைகள் நடைமுறைக்குச் சாத்தியமற்றவை என அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, துறைமுகத்துக்கு எரிபொருளைக் கொண்டுவரும் விலைக்கே நுகர்வோருக்கு அதனை வழங்க வேண்டும் என்ற எதிர்க்கட்சியின் கோரிக்கை உலகின் எந்தவொரு நாட்டிலும் நடைமுறையில் இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பினால் பொதுமக்களுக்கு ஏற்படும் சுமையைக் குறைக்கும் நோக்கில், அரசாங்கம் 57 பில்லியன் ரூபாயை எரிபொருள் மானியமாக ஒதுக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், எரிபொருள் இறக்குமதிச் செலவு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 50 சதவீதத்தால் அதிகரித்துள்ள நிலையில், எரிபொருள் விலையை முழுமையாகக் குறைப்பதற்கோ அல்லது மேலதிகமாகப் பெருமளவு நிவாரணங்களை வழங்குவதற்கோ தற்போதைய சூழலில் அரசாங்கத்தால் முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தை இலங்கை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாது எனக் குறிப்பிட்ட அமைச்சர், தற்போதைய சூழலில் எரிபொருள் விலை தொடர்பான கட்டுப்பாடுகளை முழுமையாகத் தளர்த்துவதற்கான தருணம் இதுவல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை உயர்வுக்கு காரணம் என்ன – விளக்கிய வலுசக்தி அமைச்சர் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளதால், இலங்கையிலும் எரிபொருள் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு எரிபொருள் இறக்குமதிக்காக அரசாங்கம் செலவிட வேண்டிய தொகை சுமார் 50 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.எரிபொருள் விலை தொடர்பில் எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் சில யோசனைகள் நடைமுறைக்குச் சாத்தியமற்றவை என அவர் தெரிவித்துள்ளார்.குறிப்பாக, துறைமுகத்துக்கு எரிபொருளைக் கொண்டுவரும் விலைக்கே நுகர்வோருக்கு அதனை வழங்க வேண்டும் என்ற எதிர்க்கட்சியின் கோரிக்கை உலகின் எந்தவொரு நாட்டிலும் நடைமுறையில் இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.எரிபொருள் விலை அதிகரிப்பினால் பொதுமக்களுக்கு ஏற்படும் சுமையைக் குறைக்கும் நோக்கில், அரசாங்கம் 57 பில்லியன் ரூபாயை எரிபொருள் மானியமாக ஒதுக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.எனினும், எரிபொருள் இறக்குமதிச் செலவு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 50 சதவீதத்தால் அதிகரித்துள்ள நிலையில், எரிபொருள் விலையை முழுமையாகக் குறைப்பதற்கோ அல்லது மேலதிகமாகப் பெருமளவு நிவாரணங்களை வழங்குவதற்கோ தற்போதைய சூழலில் அரசாங்கத்தால் முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.மேலும், மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தை இலங்கை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாது எனக் குறிப்பிட்ட அமைச்சர், தற்போதைய சூழலில் எரிபொருள் விலை தொடர்பான கட்டுப்பாடுகளை முழுமையாகத் தளர்த்துவதற்கான தருணம் இதுவல்ல என்றும் தெரிவித்துள்ளார்.