• Nov 06 2026

தேசிய மலையகப் பெண்கள் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளருடன் சந்திப்பு.

Ziya / Nov 3rd 2026, 11:59 am
image

பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்புடன் (VOPP) இணைந்து செயற்படும் தேசிய மலையகப் பெண்கள் சம்மேளனத்தின் அழைப்பாளர் லவீனா ஹஸந்தி மற்றும் ஆலோசகர் விரிவுரையாளர் ஏ. சண்முகவடிவு ஆகியோரின் தலைமையில், சம்மேளனத்தின் பிரதிநிதிகள் நேற்று (02.11.2026) மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளரைச் சந்தித்தனர்.


இதன்போது, மலையகப் பெண்கள் தற்போது எதிர்கொண்டு வருகின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, டித்வா புயலினால் பாதிக்கப்பட்டு, இன்றுவரை பாதிப்புகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்ற பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், காணி மற்றும் வீட்டு வசதிப் பிரச்சினைகள், அடிப்படை வசதிகளுக்கான அணுகல் மற்றும் கல்வி தொடர்பான பிரச்சினைகள் ஆகியவை குறித்து கவனம் செலுத்தப்பட்டது.


மேலும், மலையகப் பெண்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை உள்ளடக்கிய மகஜர் ஒன்றும் அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.


இக்கலந்துரையாடலில், பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் தேசிய திட்ட இணைப்பாளர் பிரியதர்ஷினி, காலி மாவட்ட இணைப்பாளர் ஹர்ஷனி, மாத்தறை மாவட்ட பெண்கள் பிரிவு பொறுப்பாளர் தினேஷியா மற்றும் மாத்தறை, காலி, களுத்துறை, மாத்தளை, நுவரெலியா, பதுளை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.


தேசிய மலையகப் பெண்கள் சம்மேளனத்தின் சார்பில், உப தலைவி டி. ராஜேஸ்வரி, இணைச் செயலாளர்களான எஸ். கோமதி மற்றும் என். ஜெயமேரி, பொருளாளர் எம். சந்திரமதி, உப பொருளாளர் பி. அனுப்பிரியா, நிறைவேற்றுக் குழு உறுப்பினர் ஆர். மேகலா மற்றும் உறுப்பினர்களான எஸ். வள்ளியம்மா, எம். தேவிகா, எம். எல். புனிதா ஆகியோரும் கலந்துகொண்டனர்.


மலையகப் பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகள், பாதுகாப்பு, வாழ்வாதாரம் மற்றும் அடிப்படைத் தேவைகள் தொடர்பான பிரச்சினைகளை உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அவற்றுக்கான தீர்வுகளை வலியுறுத்தும் நோக்கில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

தேசிய மலையகப் பெண்கள் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளருடன் சந்திப்பு. பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்புடன் (VOPP) இணைந்து செயற்படும் தேசிய மலையகப் பெண்கள் சம்மேளனத்தின் அழைப்பாளர் லவீனா ஹஸந்தி மற்றும் ஆலோசகர் விரிவுரையாளர் ஏ. சண்முகவடிவு ஆகியோரின் தலைமையில், சம்மேளனத்தின் பிரதிநிதிகள் நேற்று (02.11.2026) மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளரைச் சந்தித்தனர்.இதன்போது, மலையகப் பெண்கள் தற்போது எதிர்கொண்டு வருகின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, டித்வா புயலினால் பாதிக்கப்பட்டு, இன்றுவரை பாதிப்புகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்ற பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், காணி மற்றும் வீட்டு வசதிப் பிரச்சினைகள், அடிப்படை வசதிகளுக்கான அணுகல் மற்றும் கல்வி தொடர்பான பிரச்சினைகள் ஆகியவை குறித்து கவனம் செலுத்தப்பட்டது.மேலும், மலையகப் பெண்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை உள்ளடக்கிய மகஜர் ஒன்றும் அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.இக்கலந்துரையாடலில், பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் தேசிய திட்ட இணைப்பாளர் பிரியதர்ஷினி, காலி மாவட்ட இணைப்பாளர் ஹர்ஷனி, மாத்தறை மாவட்ட பெண்கள் பிரிவு பொறுப்பாளர் தினேஷியா மற்றும் மாத்தறை, காலி, களுத்துறை, மாத்தளை, நுவரெலியா, பதுளை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.தேசிய மலையகப் பெண்கள் சம்மேளனத்தின் சார்பில், உப தலைவி டி. ராஜேஸ்வரி, இணைச் செயலாளர்களான எஸ். கோமதி மற்றும் என். ஜெயமேரி, பொருளாளர் எம். சந்திரமதி, உப பொருளாளர் பி. அனுப்பிரியா, நிறைவேற்றுக் குழு உறுப்பினர் ஆர். மேகலா மற்றும் உறுப்பினர்களான எஸ். வள்ளியம்மா, எம். தேவிகா, எம். எல். புனிதா ஆகியோரும் கலந்துகொண்டனர்.மலையகப் பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகள், பாதுகாப்பு, வாழ்வாதாரம் மற்றும் அடிப்படைத் தேவைகள் தொடர்பான பிரச்சினைகளை உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அவற்றுக்கான தீர்வுகளை வலியுறுத்தும் நோக்கில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

Advertisement

Advertisement

Advertisement