• Nov 01 2026

கடற்படையின் கட்டுப்பாட்டில் மேய்ச்சல் நிலம் – தம்பலகாமம் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல் என்ன?

Chithra / Nov 1st 2026, 11:17 am
image


திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேசத்தில் போதிய மேய்ச்சல் நிலங்கள் இல்லாத காரணத்தினால் கால்நடை வளர்ப்பாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


குறிப்பாக, தம்பலகாமம் பிரதேசத்தில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்கள் இல்லாத நிலையில், கடவானை பகுதியில் மேய்ச்சலுக்குப் பொருத்தமான நிலப்பகுதி காணப்படுகின்ற போதிலும், குறித்த பகுதி கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அதனைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.


இதன் காரணமாக மாடுகளுக்கான உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதிலும், கால்நடை வளர்ப்புத் தொழிலைத் தொடர்ந்து முன்னெடுப்பதிலும் அவர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.


மேலும், மேய்ச்சல் நிலத்தைத் தேடி மொரவெவ பகுதிக்கு மாடுகளை அழைத்துச் சென்றபோதும், அப்பகுதி மக்களால் அவை திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால், கால்நடைகளைத் தம்பலகாமம் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வளர்ப்பாளர்கள் குறிப்பிடுகின்றனர்.


கால்நடை வளர்ப்பை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள பல குடும்பங்கள் இத்தொழிலையே நம்பி தமது அன்றாட பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. இந்நிலையில், மேய்ச்சல் நிலப் பற்றாக்குறை அவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


கடற்படையின் கட்டுப்பாட்டில் மேய்ச்சல் நிலம் – தம்பலகாமம் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல் என்ன திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேசத்தில் போதிய மேய்ச்சல் நிலங்கள் இல்லாத காரணத்தினால் கால்நடை வளர்ப்பாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.குறிப்பாக, தம்பலகாமம் பிரதேசத்தில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்கள் இல்லாத நிலையில், கடவானை பகுதியில் மேய்ச்சலுக்குப் பொருத்தமான நிலப்பகுதி காணப்படுகின்ற போதிலும், குறித்த பகுதி கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அதனைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.இதன் காரணமாக மாடுகளுக்கான உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதிலும், கால்நடை வளர்ப்புத் தொழிலைத் தொடர்ந்து முன்னெடுப்பதிலும் அவர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.மேலும், மேய்ச்சல் நிலத்தைத் தேடி மொரவெவ பகுதிக்கு மாடுகளை அழைத்துச் சென்றபோதும், அப்பகுதி மக்களால் அவை திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால், கால்நடைகளைத் தம்பலகாமம் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வளர்ப்பாளர்கள் குறிப்பிடுகின்றனர்.கால்நடை வளர்ப்பை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள பல குடும்பங்கள் இத்தொழிலையே நம்பி தமது அன்றாட பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. இந்நிலையில், மேய்ச்சல் நிலப் பற்றாக்குறை அவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement