• Nov 05 2026

நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டதற்கான காரணம் என்ன? – அறிக்கையில் தெளிவில்லை! தொழிற்சங்கங்கள் குற்றச்சாட்டு

Chithra / Nov 1st 2026, 11:49 am
image


கடந்த ஒக்டோபர் 17ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின் தடை தொடர்பில் தேசிய கட்டமைப்பு இயக்குநர் நிறுவனம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ள அறிக்கை தெளிவற்றதாக உள்ளதென மின்சார தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.


குறிப்பாக, தரம் குறைந்த நிலக்கரி காரணமாகவே நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின் உற்பத்தி இயந்திரங்கள் செயலிழந்தனவா என்பது குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.


குறித்த அறிக்கையின்படி, சம்பவத்தின்போது காலை 11.43 மணியளவில் நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது அலகிலிருந்து பெறப்பட்ட 187 மெகாவாட் மின்சாரம் 450 மில்லி செக்கன்களுக்குள் துண்டிக்கப்பட்டுள்ளது.


இதனைத் தொடர்ந்து வெறும் 4.1 செக்கன்களுக்குள் நாட்டின் முழு மின் கட்டமைப்பும் செயலிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்போது தானியங்கி மின்சாரத் துண்டிப்பு முறைமையின் ஐந்து கட்டங்களும் செயற்படுத்தப்பட்டுள்ளதுடன், நுரைச்சோலை, விக்டோரியா, கொத்மலை, ரந்தெனிகல, சமனலவெவ மற்றும் லக்ஸபான உள்ளிட்ட பல நீர்மின் உற்பத்தி நிலையங்களின் அலகுகளும் பாதுகாப்பு முறைமைகள் காரணமாகச் செயலிழந்துள்ளன.


இதன் காரணமாக நாடளாவிய ரீதியிலான மின் விநியோகத்தை முழுமையாக வழமைக்குக் கொண்டுவருவதற்கு 5 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் எடுத்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மின் கட்டமைப்பை மீண்டும் வழமைக்குக் கொண்டுவரும் நடவடிக்கையின்போது யுகதனவி மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்ட சில மின் உற்பத்தி நிலையங்களில் தொழில்நுட்பத் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனினும், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது அலகு செயலிழந்தமைக்கான துல்லியமான அடிப்படைக் காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், இது தொடர்பான விரிவான அறிக்கை பின்னர் சமர்ப்பிக்கப்படும் எனவும் தேசிய கட்டமைப்பு இயக்குநர் நிறுவனம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில், மின் தடைக்கான உண்மையான காரணம் என்ன என்பது தொடர்பில் தெளிவான விளக்கத்தை வழங்குமாறு மின்சார தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.


நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டதற்கான காரணம் என்ன – அறிக்கையில் தெளிவில்லை தொழிற்சங்கங்கள் குற்றச்சாட்டு கடந்த ஒக்டோபர் 17ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின் தடை தொடர்பில் தேசிய கட்டமைப்பு இயக்குநர் நிறுவனம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ள அறிக்கை தெளிவற்றதாக உள்ளதென மின்சார தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.குறிப்பாக, தரம் குறைந்த நிலக்கரி காரணமாகவே நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின் உற்பத்தி இயந்திரங்கள் செயலிழந்தனவா என்பது குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.குறித்த அறிக்கையின்படி, சம்பவத்தின்போது காலை 11.43 மணியளவில் நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது அலகிலிருந்து பெறப்பட்ட 187 மெகாவாட் மின்சாரம் 450 மில்லி செக்கன்களுக்குள் துண்டிக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து வெறும் 4.1 செக்கன்களுக்குள் நாட்டின் முழு மின் கட்டமைப்பும் செயலிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்போது தானியங்கி மின்சாரத் துண்டிப்பு முறைமையின் ஐந்து கட்டங்களும் செயற்படுத்தப்பட்டுள்ளதுடன், நுரைச்சோலை, விக்டோரியா, கொத்மலை, ரந்தெனிகல, சமனலவெவ மற்றும் லக்ஸபான உள்ளிட்ட பல நீர்மின் உற்பத்தி நிலையங்களின் அலகுகளும் பாதுகாப்பு முறைமைகள் காரணமாகச் செயலிழந்துள்ளன.இதன் காரணமாக நாடளாவிய ரீதியிலான மின் விநியோகத்தை முழுமையாக வழமைக்குக் கொண்டுவருவதற்கு 5 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் எடுத்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.மின் கட்டமைப்பை மீண்டும் வழமைக்குக் கொண்டுவரும் நடவடிக்கையின்போது யுகதனவி மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்ட சில மின் உற்பத்தி நிலையங்களில் தொழில்நுட்பத் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது அலகு செயலிழந்தமைக்கான துல்லியமான அடிப்படைக் காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், இது தொடர்பான விரிவான அறிக்கை பின்னர் சமர்ப்பிக்கப்படும் எனவும் தேசிய கட்டமைப்பு இயக்குநர் நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், மின் தடைக்கான உண்மையான காரணம் என்ன என்பது தொடர்பில் தெளிவான விளக்கத்தை வழங்குமாறு மின்சார தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

Advertisement

Advertisement

Advertisement